Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டயர் வெடித்து பெரும் விபத்து.. லாரி மீது மோதிய பேருந்து.. 3 பேர் உயிரிழப்பு..

Bus Accident: அந்த வழியாக வந்த லாரி ஓட்டுநர் தீயைக் கவனித்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் பேருந்தின் ஜன்னல்களை உடைத்ததாகவும், இதனால் தீ மேலும் பரவுவதற்குள் உள்ளே சிக்கியிருந்த பயணிகள் தப்பிக்க முடிந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, சமயோஜிதமாக செயல்பட்ட அவரை காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

டயர் வெடித்து பெரும் விபத்து.. லாரி மீது மோதிய பேருந்து.. 3 பேர் உயிரிழப்பு..
லாரி மீது மோதிய பேருந்து
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Jan 2026 12:27 PM IST

ஆந்திரப் பிரதேசம், ஜனவரி 22: ஆந்திராவின் நந்தியால் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, லாரி மீது மோதி தீப்பிடித்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெல்லூரில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற ஒரு தனியார் பேருந்து, இன்று அதிகாலையில் ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் டேங்கர் லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அது இரண்டு வாகனங்களையும் சூழ்ந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் உள்ளே சிக்கிக்கொண்டனர். தொடர்ந்து, விரைந்து வந்த மீட்புக் குழுவினரும், அப்பகுதி மக்களும் இணைந்து பயணிகளை மீட்கவும் தீயைக் கட்டுப்படுத்தவும் முயற்சி செய்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை தொடங்கி நடந்து வருகிறது.

மேலும் படிக்க: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒருநாள் ஸ்டிரைக் அறிவிப்பு.. 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்..

விபத்துக்கான காரணம் என்ன?

இந்த விபத்தானது ஷிரிவெல்லமெட்டா கிராமத்திற்கு அருகே அதிகாலை 2 மணியளவில் நடந்தது. தனியார் பேருந்தின் டயர் வெடித்ததன் காரணமாக விபத்து நிகழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, சாலைத் தடுப்பைத் தாண்டி, எதிர் திசையில் வந்த ஒரு லாரி மீது மோதியது. தொடர்ந்து, மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனால், பேருந்துக்குள் இருந்த பயணிகள் தப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்தனர். விபத்துக்குள்ளான அந்த பேருந்துக்குள் 36 பயணிகள் இருந்துள்ளனர். உயிர் பிழைத்த பலர், அங்கிருந்தவர்கள் மற்றும் மீட்புப் படையினர் உதவியுடன் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வழியாகத் தப்பினர்.

மீட்பு பணிக்கு உதவிய லாரி ஓட்டுநர்:

அதேசமயம், அந்த வழியாக வந்த லாரி ஓட்டுநர் தீயைக் கவனித்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் பேருந்தின் ஜன்னல்களை உடைத்ததாகவும், இதனால் தீ மேலும் பரவுவதற்குள் உள்ளே சிக்கியிருந்த பயணிகள் தப்பிக்க முடிந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, சமயோஜிதமாக செயல்பட்ட  லாரி ஓட்டுநரை காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர், அவரது செயல் அதிக உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம் என்று கூறினர். தொடர்ந்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நந்தியால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர்களின் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்கலிவ் இன் பார்ட்னரை கொலை செய்து இரும்பு பெட்டியில் வைத்து எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!

விபத்து குறித்து தீவிர விசாரணை:

விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் தீயை அணைத்து, எரிந்த வாகனங்களை நெடுஞ்சாலையில் இருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் காயமடைந்தவர்களிடம் வாக்குமூலங்களை பெற்று வருகின்றனர். அதோடு, டயர் வெடித்தததால் மட்டுமே விபத்து நிகழ்ந்ததா அல்லது பிற இயந்திர கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர்.