Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒருநாள் ஸ்டிரைக் அறிவிப்பு.. 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்..

Bank employees nationwide strike: கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட போராட்டம், அரசின் உறுதிமொழியை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது. எனினும், இதுவரை அரசிடம் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லாததால், ஜனவரி 27-ஆம் தேதி ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த வங்கி அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒருநாள் ஸ்டிரைக் அறிவிப்பு.. 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்..
வங்கி ஊழியர்கள் ஒருநாள் ஸ்டிரைக் அறிவிப்பு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Jan 2026 07:32 AM IST

வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கிகள் ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தற்போது வங்கிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படுகின்றன. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது. இதற்கிடையே வங்கிகளை பிரதிநிதிப்படுத்தும் முன்னணி அமைப்பான இந்திய வங்கிகள் சங்கம் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாளாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது. இது தொடர்பாக பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. எனினும், இதனை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் நிலவுகிறது.

இதையும் படிக்க: வரலாறு காணாத உச்சத்தில் தங்கம்.. ரூ.1,14,000-க்கு விற்பனை.. ஷாக்கில் சாமானியர்கள்!

5 நாள் வேலை கோரிக்கை:

எல்ஐசி, ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு சந்தைகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குவதால், வங்கிகளுக்கும் இந்த முறையை நீட்டிக்க வேண்டும் என, வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதோடு, 5 நாட்கள் மட்டுமே வேலை இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கான சேவை நேரம் குறைக்கப்படாது என்று வங்கி ஊழியர்கள் சங்கங்கள் உறுதியளித்துள்ளன. இதற்காக ஒவ்வொரு நாளும் கூடுதலாக 40 நிமிடங்கள் பணியாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை, வேலையை குறைப்பது அல்ல; மாறாக மனிதாபிமானத்தின் அடிப்படையில் கோரப்படுகிறது’ என வங்கி அதிகாரிகள் சங்கம் தெரிவித்து வருகிறது.

ஓய்வூதிய ஊயர்வு, வேலை நேரம் முறைப்படுத்தல்:

இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, LICல் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், வங்கி ஊழியர்களுக்கு வாரம் ஐந்து நாள் வேலை, வேலை நேரத்தை முறைப்படுத்துதல், ஓய்வூதியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட எங்களின் கோரிக்கைகளை நாங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். இந்திய வங்கிகள் சங்கம் (IBA) 2024-ஆம் ஆண்டில், ஆறு மாதங்களுக்குள் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எங்களுக்கு உறுதியளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட போராட்டம், அரசின் உறுதிமொழியை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது. எனினும், இதுவரை அரசிடம் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லாததால், ஜனவரி 27-ஆம் தேதி ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பட்ஜெட் 2026 : வரி செலுத்துவோருக்கு மீண்டும் குட் நியூஸ் சொல்வாரா நிர்மலா சீதாராமன் – எகிறும் எதிர்பார்ப்பு?

வங்கி சேவைகள் 4 நாட்கள் முடங்கும் அபாயம்:

வங்கி ஊழியர்கள் ஜனவரி 27ல் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், வங்கி சேவைகள் 4 நாட்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 24ம் தேதி 4வது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறையாகும், 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, 26ம் தேதி குடியரசுத் தினம் என்பதால் விடுமுறை, அடுத்த நாளான ஜனவரி 27ல் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் சேவைகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.