Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உலகில் நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியல்.. டாப் 5ல் இந்திய நகரங்கள்..

Bengaluru Congestion: உலகளாவிய நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தொடர்ந்து, இந்தப் பட்டியலில் பெங்களூருவில் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை; பல இந்திய நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உலகளவில் டாப் 35 இடங்களுக்குள் இந்தியாவில் பல நகரங்கள் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

உலகில் நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியல்.. டாப் 5ல் இந்திய நகரங்கள்..
நெரிசல் நகரான பெங்களூரு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Jan 2026 12:26 PM IST

போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர் பெற்ற இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூரு, தற்போது உலகின் மிகவும் நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய டாம்டாம் போக்குவரத்து குறியீட்டில் பெங்களூரு 74.4 சதவீத சராசரி நெரிசல் மட்டத்துடன் உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது 2024ஆம் ஆண்டை விட 1.7 சதவீதப் புள்ளிகள் அதிகமாகும். உலகம் முழுவதும் 3.65 டிரில்லியன் கி.மீ. பயணத் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த குறியீட்டினி படி, உலகளாவிய அளவில் மெக்சிகோ நகரம் முதலிடத்திலும், பெங்களூரு இரண்டாவது இடத்தலும், டப்ளின் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

மேலும் படிக்க: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒருநாள் ஸ்டிரைக் அறிவிப்பு.. 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்..

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் நேரம்:

பெங்களூரு பயணிகளுக்கு, இந்த அறிக்கையின் முக்கிய புள்ளிவிவரம் மிகவும் எளிமையாக அறியலாம். அதாவது,2025ல் 10 கி.மீ. தூரத்தைக் கடக்க சராசரியாக 36 நிமிடங்கள் 9 வினாடிகள் ஆனது, இது 2024ஆம் ஆண்டை விட 2 நிமிடங்கள் 4 வினாடிகள் அதிகமாகும். காலை நேர நெரிசல் நேரத் தரவுகள்: 10 கி.மீ. தூரத்தைக் கடக்க 41 நிமிடங்கள் 6 வினாடிகள் ஆகிறது, சராசரி நெரிசல் 94.2 சதவீதம் மற்றும் சராசரி வேகம் 14.6 கி.மீ மணிக்கு. மாலை நேர நெரிசல்: 10 கி.மீ. தூரத்தைக் கடக்க 45 நிமிடங்கள் 27 வினாடிகள் ஆகிறது, நெரிசல் 115.2 சதவீதம் மற்றும் சராசரி வேகம் 13.2 கி.மீ மணிக்கு.

ஒரு ஆண்டில் 7 நாட்களை இழந்த பெங்களூர்வாசிகள்:

பெங்களூருவாசிகள் நெரிசல் நேரப் போக்குவரத்தில் மட்டும் ஆண்டுக்கு 168 மணிநேரத்தை இழந்துள்ளனர். இது 7 நாட்கள் மற்றும் 40 நிமிடங்களுக்குச் சமம், இது 2024-ஆம் ஆண்டை விட 12 மணிநேரம் 46 நிமிடங்கள் அதிகமாகும். 15 நிமிடங்களில் பெங்களூருவில் கடக்கப்படும் சராசரி தூரம் 4.2 கி.மீ. ஆகும், இது முந்தைய ஆண்டை விட 0.2 கி.மீ. குறைவாகும். இது அன்றாடப் பயணங்களில் நெரிசல் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இதையும் படிங்கலிவ் இன் பார்ட்னரை கொலை செய்து இரும்பு பெட்டியில் வைத்து எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!

உலகின் முதல் ஐந்து இடங்கள்:

உலகளாவிய நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தொடர்ந்து, இந்தப் பட்டியலில் உள்ள முதல் ஐந்து நகரங்கள், மெக்சிகோ, பெங்களூரு – இந்தியா, டப்ளின் – அயர்லாந்து, லோட்ஸ் – போலந்து, புனே – இந்தியா ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு, டாம்டாம் தரவரிசைப்படி, போக்குவரத்து நெரிசல் பெங்களூருவில் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை; பல இந்திய நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உலகளவில் டாப் 35 இடங்களுக்குள் இந்தியாவில் பல நகரங்கள் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இதில், 58.6 சதவீத நெரிசலுடன் சென்னை 32வது இடத்தில் உள்ளது.