பட்ஜெட் 2026: எப்போது தாக்கல் செய்யப்படும்? பொருளாதார ஆய்வு அட்டவணை.. எப்படி நேரலையில் பார்ப்பது? முழு விவரம் இதோ..
Union Budget 2026: 2026–27 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வு (Economic Survey), பட்ஜெட்டுக்கு ஒரு நாள் முன்னதாக, ஜனவரி 29 அன்று முதன்மை பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் அவர்களால் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து மத்திய பட்ஜெட் 2026–27, பிப்ரவரி 1, 2026 அன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
ஜனவரி 21, 2026: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026–27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட்டும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA 3.0 அரசின் மூன்றாவது முழு பட்ஜெட்டும் ஆகும். சமீப ஆண்டுகளில் அரிதாக நடைபெறும் வகையில், இந்த ஆண்டு பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: ஜனவரி 28 – ஏப்ரல் 2
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 28 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், பட்ஜெட் கூட்டத் தொடருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பட்ஜெட் தாக்கலுடன், மத்திய பட்ஜெட்டுகளை அதிக எண்ணிக்கையில் தாக்கல் செய்த நிதியமைச்சர்களான மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, பி. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோரின் சாதனையை நிர்மலா சீதாராமன் மிஞ்ச உள்ளார். வரவிருக்கும் நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார பாதையை இந்த பட்ஜெட் முக்கியமாக வடிவமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: பட்ஜெட் 2026: PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் மாற்றம்.. உதவித்தொகை ரூ.11,800 ஆக உயர்வு?”
பொருளாதார ஆய்வு – ஜனவரி 29
2026–27 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வு (Economic Survey), பட்ஜெட்டுக்கு ஒரு நாள் முன்னதாக, ஜனவரி 29 அன்று முதன்மை பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் அவர்களால் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து மத்திய பட்ஜெட் 2026–27, பிப்ரவரி 1, 2026 அன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
பட்ஜெட்டை நேரலை எவ்வாறு பார்க்கலாம்?
பட்ஜெட் உரை indiabudget.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம், சன்சத் டிவி, தூர்தர்ஷன் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பப்படும். மேலும் பல தேசிய செய்தி சேனல்கள், சன்சத் டிவி, தூர்தர்ஷன் மற்றும் செய்தி தகவல் பணியகம் (PIB) ஆகியவற்றின் யூடியூப் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பும் தகவல் புதுப்பிப்புகளும் வழங்கப்படும்.
வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள்:
2025–26 பட்ஜெட்டில் புதிய வரி முறையில் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வரிவிலக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் வரி செலுத்துவோர் கூடுதல் வரிவிலக்கு, எளிமையான விதிமுறைகள் மற்றும் துறைகளுக்கான இலக்கு சார்ந்த சலுகைகளை எதிர்பார்க்கின்றனர்.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்ட தரவின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது (2024–25 இல் 6.5%). ஆனால், பணவீக்கத்தை கணக்கில் கொள்ளாத பெயரளவு GDP வளர்ச்சி 8% ஆக குறையும் என்றும், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2026–27 பட்ஜெட்டில் வரிவருவாய் மதிப்பீடுகளுக்கு முக்கிய அடிப்படையாக இருக்கும்.
மேலும் படிக்க: சபரிமலை தங்க திருட்டு வழக்கு: தமிழகம் உள்பட 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
2026–27 பட்ஜெட்டிற்குத் தயாராகும் நிலையில், கடந்த ஆண்டு விவசாயத் துறைக்காக அறிவிக்கப்பட்ட பல நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. 2025–26 பட்ஜெட்டில், விவசாயத்தை “பொருளாதாரத்தின் முதல் இயந்திரம்” என குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன்,
-
கிசான் கிரெடிட் கார்டு (KCC) மூலம் பெறப்படும் கடன்களின் வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துதல்,
-
பருத்தி உற்பத்தித் திறன் மேம்பாட்டு இயக்கம்,
-
அதிக விளைச்சல் விதைகளுக்கான தேசிய இயக்கம் ஆகியவற்றை அறிவித்திருந்தார்.
மேம்படுத்தப்பட்ட KCC கடன் திட்டம், 7.7 கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால்வளத் துறையினருக்கு குறுகியகால கடன்களை எளிதாக்கி, நிறுவன கடன்களுக்கான அணுகலை மேம்படுத்தும் என அவர் தெரிவித்திருந்தார்.