AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

UAE-ல் இருக்கும் இந்திய பள்ளி மாணவர்களுக்கு ICSE, ISC பொதுத்தேர்வு ரத்து….

ICSE Exam Cancelled: ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் 2026 ICSE மற்றும் ISC பொதுத்தேர்வுகளை CISCE வாரியம் ரத்து செய்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடத்தப்படாமல், மாற்று மதிப்பீட்டு முறையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UAE-ல் இருக்கும் இந்திய பள்ளி மாணவர்களுக்கு ICSE, ISC பொதுத்தேர்வு ரத்து….
ICSE, ISC பொதுத்தேர்வு ரத்துImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 13 Mar 2026 15:50 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக, 2026-ஆம் ஆண்டிற்கான ICSE (பத்தாம் வகுப்பு) மற்றும் ISC (பன்னிரண்டாம் வகுப்பு) பொதுத்தேர்வுகளை CISCE வாரியம் ரத்து செய்துள்ளது. அங்குள்ள மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத சூழ்நிலை காரணமாக மாணவர்கள் தேர்வுகளில் பங்கேற்பது சிரமமாக இருக்கும் என்பதால், மாணவர்களின் உடல் மற்றும் மனநலனை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வாரியம் விளக்கியுள்ளது. குறிப்பாக அங்கு படித்து வரும் இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற நோக்கில், மாணவர்களுக்கு ஏற்ற முறையில் மதிப்பீடு செய்யும் புதிய திட்டத்தையும் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியதும் அமீரகத்தில் உள்ள இந்தியப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அதனை கவனத்துடன் எடுத்துக்கொண்டுள்ளனர்.

மாற்று மதிப்பீட்டு முறையில் முடிவுகள்

தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் ‘மாற்று மதிப்பீட்டு முறை’ (Alternative Assessment) மூலம் முடிவுகள் அறிவிக்கப்படும் என வாரியம் தெரிவித்துள்ளது. இதன்படி, மாணவர்களின் முந்தைய உள்மதிப்பீட்டுத் தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி முடிவுகள் கணக்கிடப்படும். பள்ளிகளில் நடைபெற்ற காலாண்டு, அரையாண்டு மற்றும் பிற உள்மதிப்பீட்டு தேர்வுகளின் முடிவுகளும் இதில் முக்கிய பங்காற்றும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், செய்முறைப் பாடங்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் ஆசிரியர்கள் வழங்கிய தொடர்ச்சியான மதிப்பீட்டு பதிவுகளும் இறுதி மதிப்பெண் கணக்கீட்டில் சேர்க்கப்படும். இந்த முறை மூலம் மாணவர்கள் கல்வியில் பாதிக்கப்படாமல் முடிவுகளை பெற முடியும் என CISCE வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கலவையான உணர்வு

இந்த திடீர் அறிவிப்பால் அமீரகத்தில் உள்ள இந்தியப் பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் ஒருபுறம் நிம்மதி அடைந்தாலும், மறுபுறம் உயர்கல்வி சேர்க்கை குறித்த கவலையிலும் உள்ளனர். தேர்வு அழுத்தம் இல்லாமல் போனது மாணவர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்தாலும், மாற்று மதிப்பீட்டு முறையில் வழங்கப்படும் மதிப்பெண்கள் உயர்கல்வி சேர்க்கையில் எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்த மதிப்பெண்கள் போதுமானதாக இருக்கும் என்கிற சந்தேகமும் சிலரிடையே உள்ளது.

இருப்பினும் CISCE வாரியம் இந்த மதிப்பீட்டு முறை சரியான கல்வி தரத்தைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Follow Us