வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்.. வங்கி சேவை பாதிக்கும் அபாயம்..
Bank employees strike; இந்திய வங்கிகள் சங்கம், வார நாட்களில் வேலை நேரத்தை நீட்டித்து, அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவிக்க ஒப்புக்கொண்டிருந்தது. இருப்பினும், இதற்கு அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, வங்கி ஊழியர் சங்கம் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
5 நாள் வேலை வாரத்தை அமல்படுத்தக் கோரி வங்கி ஊழியர்கள் நாளை (ஜனவரி 27) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கிச் சேவைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வங்கித் துறையில் 5 நாள் வேலை வாரத்தை அமல்படுத்துவதற்கு அரசாங்கத்தின் ஒப்புதலைக் கோரி, ஐக்கிய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) அகில இந்திய வங்கி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு, பிராந்திய கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.
மேலும் படிக்க: சென்னையில் 27 ஆம் தேதி இந்த 5 புறநகர் ரயில்கள் ரத்து – எந்தெந்த ரயில்கள்?
5 நாள் வேலை கோரிக்கை:
எல்ஐசி, ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு சந்தைகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குவதால், வங்கிகளுக்கும் இந்த முறையை நீட்டிக்க வேண்டும் என, வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதோடு, 5 நாட்கள் மட்டுமே வேலை இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கான சேவை நேரம் குறைக்கப்படாது என்று வங்கி ஊழியர்கள் சங்கங்கள் உறுதியளித்துள்ளன. இதற்காக ஒவ்வொரு நாளும் கூடுதலாக 40 நிமிடங்கள் பணியாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை, வேலையை குறைப்பது அல்ல; மாறாக மனிதாபிமானத்தின் அடிப்படையில் கோரப்படுகிறது’ என வங்கி அதிகாரிகள் சங்கம் தெரிவித்து வருகிறது.
அரசு ஒப்புதல் அளிப்பதில் தாமதம்:
தற்போது, வங்கி ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது.மீதமுள்ள சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. இந்திய வங்கிகள் சங்கம், வார நாட்களில் வேலை நேரத்தை நீட்டித்து, அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவிக்க ஒப்புக்கொண்டிருந்தது. இருப்பினும், இதற்கு அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, வங்கி ஊழியர் சங்கம் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் படிங்க : பட்ஜெட் 2026 : வரி செலுத்துவோருக்கு மீண்டும் குட் நியூஸ் சொல்வாரா நிர்மலா சீதாராமன் – எகிறும் எதிர்பார்ப்பு?
பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரும் வங்கி ஊழியர்கள்:
டிஜிட்டல் வங்கிச் சேவைகள் பரவலாகக் கிடைப்பதால், இந்த வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது என்று வங்கி சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த போராட்டத்தின் போது பொதுமக்களின் ஒத்துழைப்பையும் அவர்கள் கோரினர். இதன் விளைவாக, இன்று விடுமுறை நாள் (குடியரசு தினம்) மற்றும் நாளை வேலைநிறுத்த நாள் என்பதால், இரண்டு நாட்களுக்கு வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.