Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் 27 ஆம் தேதி இந்த 5 புறநகர் ரயில்கள் ரத்து – எந்தெந்த ரயில்கள்?

Chennai Suburban Trains Cancelled : சென்னையில் வருகிற ஜனவரி 27, 2026 அன்று செவ்வாய்க்கிழமை 5 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சென்னையில் 27 ஆம் தேதி இந்த 5 புறநகர் ரயில்கள் ரத்து – எந்தெந்த ரயில்கள்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Jan 2026 19:48 PM IST

சென்னை, ஜனவரி 25 : சென்னை புறநகர் ரயில்களில் (Train) நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கல்வி, வேலை சார்ந்து சென்னை (Chennai) நகருக்கு வரும் பயணிகளுக்கு இந்த ரயில்கள் பெரிதும் கைகொடுக்கின்றன. இந்த நிலைில், சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய உள்ள பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகிற 2026 ஆம் ஆண்டு 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மொத்தம் 5 மெமு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதுடன், 4 ரயில்கள் பகுதி நேரமாக மட்டும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 7.25 மணிக்கு சென்னை பீச் நோக்கிச் செல்லும் ரயிலும் பகுதி நேரமாக மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வே சென்னை பிரிவு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, சென்னை சென்ட்ரல் – கூடூர் ரயில் பாதையில் உள்ள தாடா – சூலூர்பேட்டை நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதை பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த பணிகள் 2026 ஆம் ஆண்டு 27ஆம் தேதி நள்ளிரவு 12.50 மணி முதல் காலை 8.50 மணி வரை நடைபெற உள்ளன.

இதையும் படிக்க : தமிழக காவல்துறைக்கு பெருமை..3 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்-21 பேருக்கு தகைசால் விருது!

இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக, மூர் மார்க்கெட் – சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை – நெல்லூர், நெல்லூர் – சூலூர்பேட்டை, பிற்பகலில் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் நோக்கிச் செல்லும் ரயில், மற்றும் ஆவடி – மூர் மார்க்கெட் ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

அதேபோல், சில ரயில்கள் பகுதி நேரமாக மட்டும் இயக்கப்படுகின்றன. இதில், மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸிலிருந்து காலை 4.15 மணி மற்றும் 5.00 மணிக்கு புறப்படும் ரயில்கள் எளாவூர் வரை மட்டும் இயக்கப்படும். மேலும், சூலூர்பேட்டையிலிருந்து மூர் மார்க்கெட் நோக்கி காலை 6.45 மணி மற்றும் 7.25 மணிக்கு புறப்படும் ரயில்களும், காலை 7.25 மணிக்கு சென்னை பீச் செல்லும் ரயிலும் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்…குடியரசு தின விழாவில் அறிவிப்பு? எவை அவை!

இந்த தற்காலிக மாற்றங்கள் காரணமாக பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு செல்ல வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ரயில் சேவைகளை கருத்தில் கொண்டு பயணத்தை அமைத்துக் கொண்டால் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்க முடியும் என்றும் சென்னை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.