Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் கட்டணம்.. எத்தனை கி.மீக்கு எவ்வளவு ரூபாய் உயர்வு? முழு விவரம்..

Train Ticket Fare: இந்த விலை உயர்வின் மூலம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று ரயில்வே தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. புறநகர் ரயிலுக்கான கட்டணங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. ஏசி வகுப்புகள் மற்றும் நீண்ட தூரப் பயணிகளுக்கு மட்டும் இந்த புதிய கட்டண விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் கட்டணம்.. எத்தனை கி.மீக்கு எவ்வளவு ரூபாய் உயர்வு? முழு விவரம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Dec 2025 06:30 AM IST

டிசம்பர் 26, 2025: டிசம்பர் 26, 2025 தேதியான இன்று முதல் ரயில்வேயில் புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ரயில் டிக்கெட் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புறநகர் ரயில் பயணத்திற்கான கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்றாலும், தொலைதூரப் பயணங்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான விளக்கத்தை ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் இயக்கச் செலவுகள் பெருமளவில் அதிகரித்ததன் காரணமாக டிக்கெட் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த விலை உயர்வு?

2024-25 நிதியாண்டில் ரயில்வேயின் மொத்த இயக்கச் செலவுகள் ரூ.2,63,000 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது, ​​ஊழியர்களின் சம்பளத்திற்கு மட்டும் ரயில்வே ரூ.1,15,000 கோடியை செலவிடுகிறது. கூடுதலாக, ஓய்வூதியத்திற்காக ரூ.60,000 கோடி செலவிடப்படுகிறது. இந்த கூடுதல் சுமையை சமாளிக்க சரக்கு போக்குவரத்தை அதிகரித்து, கட்டணங்களில் சிறிய மாற்றங்களைச் செய்துள்ளதாக ரயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: இந்த ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு OTP கட்டாயம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

இந்த விலை உயர்வின் மூலம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று ரயில்வே தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. புறநகர் ரயிலுக்கான கட்டணங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. ஏசி வகுப்புகள் மற்றும் நீண்ட தூரப் பயணிகளுக்கு மட்டும் இந்த புதிய கட்டண விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

எத்தனை கி.மீக்கு எவ்வளவு ரூபாய் உயர்வு?

216 கிலோமீட்டர் முதல் 750 கிலோமீட்டர் வரை பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரூபாய் 5 டிக்கெட் கட்டண உயர்வு இருக்கும். அதே சமயத்தில், 751 கிலோமீட்டர் முதல் 1250 கிலோமீட்டர் வரை ரூபாய் 10, 1251 கிலோமீட்டர் முதல் 1750 கிலோமீட்டர் வரை ரூபாய் 15, மேலும் 1751 கிலோமீட்டருக்கு மேல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரூபாய் 20 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உலகின் உயரமான ரயில்வே பாலம்… முதல் செங்குத்து பாலம் வரை – உள்கட்டமைப்பில் இந்தியாவின் வரலாற்றுச் சாதனைகள்

இது ஒரு பக்கம் இருக்க, ஏசி முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு மற்றும் ஏசி சேர் கார் உள்ளிட்ட அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத், ராஜ்தானி, சதாப்தி போன்ற ப்ரீமியம் ரயில்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் ரயில்வே கட்டணங்களை உயர்த்தியது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் குளிர்சாதன வசதி இல்லாத வகுப்புகளுக்கான கட்டணம் ஒரு கி.மீ.க்கு 1 பைசாவும், குளிர்சாதன வசதி கொண்ட வகுப்புகளுக்கான பயணம் ஒரு கி.மீ.க்கு 2 பைசாவும் அதிகரித்தது.