கனடாவில் நடைபெற்ற மகனின் இறுதி சடங்கு.. வீடியோ காலில் பார்த்து மனமுடைந்த தந்தை.. சோக சம்பவம்!
Father Watched Son's Funeral Through Video Call | பெங்களூரை சேர்ந்த ஒருவர் கனடாவில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அவர் மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், சொந்த ஊருக்கு கொண்டுவர முடியாத நிலையில், அவருக்கு அங்கேயே இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது.
பெங்களூரு, பிப்ரவரி 13 : பெங்களூருவை (Bengaluru) சேர்ந்த ஒருவர் கனடாவில் (Canada) சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அங்கேயே இறுதி சடங்கு நடைபெற்ற நிலையில், அவரின் தந்தை இறுதி சடங்களை ஸ்மார்ட்போனில் கண்டு கண்ணீர் வடித்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர பல்வேறு சிக்கல்கள் இருந்த நிலையில், அவரது பெற்றோர் தங்களது மகனை கடைசியாக ஒருமுறை பார்க்க முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில், இந்த சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கனடாவில் சூட்டுக் கொலை செய்யப்பட்ட நபர்
கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரு, நெலமங்களா அருகே உள்ள தியாமகொண்டலு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு சந்தன் குமார் என்ற 37 வயது மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகாத நிலையில், கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் உள்ள எல்.என்.டி நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். அவர் சுமார் 6 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இதையும் படிங்க : கொட்டும் பனியில் பிரச வலியில் தவித்த கர்ப்பிணி.. தோலில் சுமந்து சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்!
இந்த நிலையில், அவர் பிப்ரவரி 06, 2026 அன்று டொரண்டோ நகரில் உள்ள வணிக வளாகத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வீடியோ காலில் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத தந்தை
கனடாவில் உயிரிழந்த சந்தன் குமாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்துள்ளன. பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட சிக்கல்கள் இருந்ததால் அவரின் பெற்றோராலும் கனடாவுக்கு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக அவரது பெற்றோர் தங்களது மகனின் இறுதி சடங்கை கனடாவிலேயே நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி, அவரது உடலுக்கு கனடாவிலே இறுதி சடங்கு நடைபெற்ற நிலையில், அவரது தனதை செல்போன் மூலம் அதனை பார்த்து மனம் உடைந்து அழும் வீடியோ பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.