AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

70-80 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் இசை எழுப்பும் சாலை.. மும்பையில் முதல் முறையாக Melody Road!

India's First Melody Road Opened In Mumbai | உலக அளவில் இதுவரை 4 மெல்லிசை சாலைகள் உள்ள நிலையில், உலகில் 5வதாக, இந்தியாவில் முதல் முறையாக மும்பையில் இந்த மெல்லிசை சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

70-80 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் இசை எழுப்பும் சாலை.. மும்பையில் முதல் முறையாக Melody Road!
மெல்லிசை சாலை
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Feb 2026 12:30 PM IST

மும்பை, பிப்ரவரி 12 : மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் மெல்லிசை சாலை (Melody Road) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 4 மெல்லிசை சாலைகள் உள்ள நிலையில், 5வது சாலையாக இது புகழ் பெற்றுள்ளது. இது தான் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் மெல்லிசை சாலையாக உள்ளது. இது இந்திய மக்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில், மெல்லிசை சாலை என்றால் என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மகாராஷ்டிராவில் இந்தியாவின் முதல் மெல்லிசை சாலை

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள நரிமண் பாயிண்டில் இருந்து ஓர்லிக்கு வடக்கு நோக்கி செல்லும் கடற்கரை சாலையில் தான் இந்த மெல்லிசை சாலை அமைந்துள்ளது. இதனை நேற்று (பிப்ரவரி 11, 2026) அந்த மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்தியாவில் புதிய முயற்சியாக அமைக்கப்பட்டுள்ள இந்த மெல்லிசை சாலையை ஏராளமான பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதையும் படிங்க : ஏஐ வீடியோக்களுக்கு லேபிள் கட்டாயம்.. ஸ்டிரிக்டாக சொன்ன மத்திய அரசு!

வாகனங்கள் கடந்து செல்லும்போது இசை எழுப்பும் சாலை

இந்த மெல்லிசை சாலையின் ஓரங்களில் கோடுகள் போடப்பட்டுள்ளன. அந்த கோடுகளை வாகனங்கள் கடந்து செல்லும்போது இசை எழுப்பப்படுகிறது. அதாவது அந்த சாலையை சுமார் 70 முதல் 80 கிலோ கீட்டர் வேகத்தில் கடந்து செல்லும்போது ஜெய் ஹோ என இசை எழுப்பும்.

இதையும் படிங்க : மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை.. இணைய வசதி துண்டிப்பு!

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை கொடுக்கும் – பட்னாவிஸ்

இந்த கடற்கரை சாலையில் உருவாக்கப்பட்ட இசை சாலை வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும். ஹங்கேரிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதுமையான சாலை அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சாலைகள் எதிர்காலத்தில் மேலும் செயல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us