Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு OTP கட்டாயம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Tatkal train ticket booking: தட்கல் முன்பதிவு நேரங்களில் பிரச்சினைகளும், தவறான முன்பதிவுகளும் அதிகம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், முறைகேடுகளை தடுக்க  வேண்டும் என்ற நோக்கில் தென்னிந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ரயில் முன்பதிவுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கியது

இந்த ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு OTP கட்டாயம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 25 Dec 2025 12:38 PM IST

தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளைத் தடுக்க, சில எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஓ.டி.பி (OTP) சரிபார்ப்பு கட்டாயமாகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயில்வே டிக்கெட்டுகளை IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். ரயில் பயணத்தில் டிக்கெட் செலவு குறைவு, பாதுகாப்பு, வேகம் என ரயில்களில் பல நன்மைகள் இருந்தாலும், டிக்கெட் முன்பதிவு செய்வது பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்களில் இது இன்னும் அதிகமாகிறது. தட்கல் டிக்கெட் முன்பதிவில் முகவர்கள் சிறப்பு மென்பொருள் பயன்படுத்தி அனைத்து டிக்கெட்டுகளையும் பதிவு செய்வதால், சாதாரண மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால், அவசர பயணங்களுக்கு டிக்கெட் கிடைப்பது கடினமாகிறது.

இதையும் படிக்க: VIBE WITH MKS.. தமிழ்நாட்டின் இளம் வீரர்களுடன் கலகலப்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின்..

சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை:

இதுபோன்று, தட்கல் முன்பதிவு நேரங்களில் பிரச்சினைகளும், தவறான முன்பதிவுகளும் அதிகம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், முறைகேடுகளை தடுக்க  வேண்டும் என்ற நோக்கில் தென்னிந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ரயில் முன்பதிவுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கியது. அதேபோல்,  இனி தட்கல் டிக்கெட்டை புக் செய்யும் போது, பயணியின் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை சரிபார்த்த பிறகே முன்பதிவு முடிவடையும். இந்த நடைமுறை IRCTC இணையதளம், மொபைல் ஆப் மற்றும் ரயில்வே கவுண்டர் முன்பதிவுகளுக்கும் பொருந்தும்.

5 எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு:

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, டிசம்பர் 23 முதல், கீழ்க்கண்ட 5 எக்ஸ்பிரஸ் ரயில்களில் ‘தட்கல்’ டிக்கெட் முன்பதிவில் ஓ.டி.பி. சரிபார்ப்பு கட்டாயமாகும். அதன்படி, சென்னை சென்ட்ரல் – அமதாபாத் நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் (12656), சென்னை சென்ட்ரல் ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (12842), எழும்பூர் மும்பை எக்ஸ்பிரஸ் (22158), சென்னை சென்ட்ரல் மும்பை எக்ஸ்பிரஸ் (22160), ஆழப்புழா தன்பாத் எக்ஸ்பிரஸ் (22158) ஆகிய ரயில்களில் தட்கல் முன்பதிவு செய்யும் போது பயணியின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓ.டி.பி. சரிபார்க்கப்பட்ட பின்னரே முன்பதிவு உறுதிசெய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாம்பை கடிக்க விட்டு தந்தையை கொன்ற கொடூர மகன்கள்.. அரசு வேலை, ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெற மாஸ்டர் பிளான்..

அனைத்து முன்பதிவு வழிகளுக்கும் பொருந்தும்:

அதோடு, இந்த நடைமுறை IRCTC இணையதளம், மொபைல் செயலி, ரயில்வே கவுண்டர்கள் ஆகிய அனைத்து முன்பதிவு வழிகளுக்கும் பொருந்தும். இது தட்கல் டிக்கெட்டுகளை உண்மையான பயணிகளுக்கே கிடைக்கச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், பயணிகள் இதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.