கால்பந்து விளையாடிய மாணவி பரிதாபமாக உயிரிழப்பு.. முதல்வர் இரங்கல்..
Girl student dies tragically while playing football: நேற்று முன்தினம் (ஜனவரி 23) நண்பகல் 12 மணியளவில் கல்லூரி மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த திவ்யதர்ஷினி கால்தடுமாறி விழுந்ததில் மயக்கமடைந்தார். அவரை சக மாணவிகள் மீட்டு காட்டுக்ககோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சேலம், ஜனவரி 25: சேலம் மாவட்டம், ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் கால்பந்து விளையாடிய மாணவி மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு பகல் மற்றும் மாலை வேளை வகுப்புகளில் 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதையும் படிங்க: லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து இரும்பு பெட்டியில் வைத்து எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!
கால்தடுமாறி விழுந்த மாணவி மயக்கம்:
இக்கல்லூரியில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தெப்பக்குளத் தெருவைச் சேர்ந்த வடிவேல் மகள் திவ்யதர்ஷினி (17) முதலாமாண்டு கணினி அறிவியல் படித்து வந்தார். இவர் மாணவிகள் விடுதியில் தங்கியருந்து படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 23) நண்பகல் 12 மணியளவில் கல்லூரி மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த திவ்யதர்ஷினி கால்தடுமாறி விழுந்ததில் மயக்கமடைந்தார்.




மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழப்பு:
அவரை சக மாணவிகள் மீட்டு காட்டுக்ககோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். எனினும், அவர் விழியிலேயே உயிரிழந்தவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தகலவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவி திவ்யதர்ஷினியின் உடலை பிரதேப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்லூரி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
முதல்வர் ஸ்டாலின் வேதனை:
இந்நிலையில், மாணவியின் இறப்பிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், சதாசிவபுரம் கிராமம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் முதலாமாண்டு பயின்று வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டையைச் சேர்ந்த, திவ்யதர்ஷினி (வயது 17) என்பவர் 23.1.2026 அன்று பிற்பகல் சக மாணவியருடன் கால்பந்து விளையாடிக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்து சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இதையும் படிக்க: கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்.. பிரியாணியில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. திடுக் சம்பவம்!!
மாணவி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி:
உயிரிழந்த மாணவி திவ்யதர்ஷினியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதுடன் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.