AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விசில் போடுவோம்…. மகத்தான வெற்றி பெறுவோம் – தவெக தலைவர் விஜய் மகிழ்ச்சி

TVK Election Symbol: தவெகவிற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஜய், தவெக ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.

விசில் போடுவோம்…. மகத்தான வெற்றி பெறுவோம் – தவெக தலைவர் விஜய் மகிழ்ச்சி
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Jan 2026 20:24 PM IST

சென்னை, ஜனவரி 22 : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியிருக்கிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தவெக நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விசில் சின்னம் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் தாங்கள் கேட்ட சின்னமே கிடைத்துள்ளதால் அக்கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். விஜய்யிடம் உள்ள வி சென்டிமெண்ட் காரணமாக விசில் சின்னம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விசில் சின்னம் கிடைத்துள்ள நிலையில் கட்சியின் தேர்தல் வரலாற்றில் முதல் அத்தியாயம் தொடங்கிவித்தாக கமெண்ட் செய்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்த விஜய்

இது தொடர்பாக தவெக தலைவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

இதையும் படிக்க : பிராட்வே பேருந்து நிலையம் இந்த தேதி முதல் செயல்படாது…பேருந்துகள் மாற்று இடத்தில் இயக்கம்!

விஜய் வெளியிட்ட அறிக்கை

 

மேலும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.

இதையும் படிக்க : ஜன.25ல் மாமல்லபுரத்தில் தவெக செயல் வீரர்கள் கூட்டம்.. பங்கேற்கிறார் விஜய்..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு. வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம்.“விசிலை ஊதுவோம்” என அழைப்பு விடுத்துள்ளார். என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us