பிராட்வே பேருந்து நிலையம் இந்த தேதி முதல் செயல்படாது…பேருந்துகள் மாற்று இடத்தில் இயக்கம்!
Chennai Broadway Bus Stand: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் ஜனவரி 24- ஆம் தேதி முதல் இந்த பேருந்து நிலையம் செயல்படாது எனவும், இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மாற்று இடத்தில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கூரைகள், கட்டடங்கள், தரைதலங்கள், கழிப்பறைகள் மற்றும் பேருந்து நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளன. இவற்றை சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற உள்ளது. இதனால், இந்த பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் வேறு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனவும், மறு அறிவிப்பு வரும் வரை சென்னை பிராட்வே பேருந்து நிலையம் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 24- ஆம் தேதி ( சனிக்கிழமை) முதல் பிராட்வே பேருந்து நிலையம் செயல்படாது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் ராயபுரம், தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன. அதன்படி, ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஈ.வெ.ரா. சாலை வழியாக…
இதில், 10 E, 11, 21, 26, 52, 54, 60, 10E, 11G,155A, 11M, 17E, 17K, 188ED, 188C, 18A, 18D, 18B, 18E, 18B, 18K, 18RX, 18R, 18X, 26B, 21C, 26K, 26G, 26R, 26M, 51J, 51D, 52G, 52B, 54G, 52K, 54L, 60A, 60D, 5C, 60H, 88K, 88C, A51, 9M, E51, E18, M51R. இதே போல, ஈ. வெ. ரா. சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் விவரம்: 101CD,50, 53E, 101X, 71D, 53B, 71H, 71V, 120, 120F, 120G, 120K, 150.
மேலும் படிக்க: மக்கள் பயன்பாட்டிற்கு வரும் சென்னை பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ.. எப்போது முதல்?




தீவுத் திடல் வழியாக…
தீவுத் திடல் வழியாக இயக்கப்படும் பேருந்து வழித்தடங்கள் குறித்த விவரம் பின்வருமாறு: காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் விவரம்: 6, 13, 60E, 102, 102C, 102K, 102B, 102S, 102X, 109A, 109X, 21G, 21L. கடற்கரை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் விவரம்: 1, 4, 44, 33C, 33L, 33A, 38G, 38H, 44C, 44CD, 4M, 56D, 56J, 56K, 56B, 57D, 57F, 57H, 57J, 57M, 8B, C56C.
வேப்பேரி வழியாக…
மண்ணடி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் விவரம்: 33B, 56C, 56F. ஈ. வெ. ரா. சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் விவரம்: 15, 20, 15F, 15G, 17D, 20A, 20D, 50M. வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் விவரம்: 35, 42, 242, 142B, 142P, 35C, 42B, 42C, 42D, 42M, 64 C, 64K, 7E, 7H, 7K, 7M- ஆகிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தைப்பூச திருவிழா…பழனி முருகன் கோயிலில் 3 நாள்கள் கட்டண தரிசனம் ரத்து!