Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்…காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!

Police Inspectors Transfer: சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பெருநகர சென்னை காவல் ஆணையர் அருண் பிறப்பித்துள்ளார். இதே போல, வெளி மாவட்டங்களிலும் போலீஸார் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்…காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!
சென்னையில் காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 22 Jan 2026 08:34 AM IST

தமிழகத்தில் சில மாவட்டங்களில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, சென்னை காவல் துறையில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவில், ராயபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காதர் மீரா மாதவரம் காவல் நிலையத்துக்கும், திருவிக நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் கிருபாநிதி மதுரவாயல் குற்றப்பிரிவுக்கும், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பிரபு புழல் குற்றப்பிரிவிற்கும், பூக்கடை பஜார் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் புஷ்பராஜ் மீனம்பாக்கம் காவல் நிலையத்துக்கும், கோவளம் சாவடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராஜன் வளசரவாக்கம் குற்றப்பிரிவுக்கும், செவன் வெல்ஸ் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ரத்தினவேல் பாண்டியன் சின்னமலை காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நொளம்பூர் காவல் நிலையத்தில் இருந்து..

இதே போல, அடையார் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இளங்கண்ணி நொளம்பூர் காவல் நிலையத்துக்கும், வேளச்சேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஜெயராம் மதுரவாயல் காவல் நிலையத்துக்கும், திருவான்மியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த முகமது புகாரி சின்னமலை காவல் நிலையத்துக்கும், பெரவலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த கண்ணகி வானகரம் காவல் நிலையத்துக்கும், கோயம்பேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்த ராஜேஷ் வானகரம் குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: நாய் கடிக்கு ஆளான சிறுவன்..பெற்றோரிடம் மறைத்ததால் விபரீதம்…3 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்!

குற்றப்பிரிவில் இருந்து…

சைதாப்பேட்டை குற்றப்பிரிவில் பணிபுரிந்த சேது நந்தம்பாக்கம் காவல் நிலையத்துக்கும், சிசிபி- யில் பணிபுரிந்த முத்து வேலு ஐ.எஸ்.க்கும், செம்பியம் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பாரதி புழல் மகளிர் காவல் நிலையத்துக்கும், துறைமுகம் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த லட்சுமி வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்துக்கும், தரமணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த தர்மா மீனம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்துக்கும், டி நகர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த கவுசல்யா சின்னமலை மகளிர் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Police Inspector Transfer

காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்

மகளிர் காவல் நிலையத்தில் இருந்து…

இவர்களைப் போல, கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த லதா, மடிப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்துக்கும், ஏ வி எஸ்-2 இல் பணிபுரிந்த மகேஷ் குமார் ஏர்போர்ட் காவல் நிலையத்துக்கும், மதுரவாயல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பூபதி ராஜ் திரு வி க நகர் காவல் நிலையத்துக்கும், நொளம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிதம்பர பாரதி ராயபுரம் காவல் நிலையத்துக்கும், வானகரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த மகேஸ்வரி கோயம்பேடு காவல் நிலையத்துக்கும் என 38 காவல் ஆய்வாளர்கள் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: திருவனந்தபுரம்-தாம்பரம் அம்ரித் பாரத் ரயில் சேவை…நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!