AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்கள்.. இந்தியாவில் 2வது இடத்தில் தமிழகம்..

Geographical Indication (GI): ஒரு பொருளின் தரம், உற்பத்தி முறை மற்றும் பாரம்பரிய சிறப்பு அந்த இடத்தின் மண், காலநிலை மற்றும் மக்களின் திறமையுடன் தொடர்புடையதாக இருந்தால் அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவதாக குறிப்பிடுகிறது. இது பொருளின் பூர்வீகத்தை உறுதி செய்யும் முக்கிய அடையாளமாக உள்ளது.

புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்கள்.. இந்தியாவில் 2வது இடத்தில் தமிழகம்..
இந்தியாவில் 2வது இடத்தில் தமிழகம்..
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Jan 2026 14:59 PM IST

இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. இதுவரை 74 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஒரு பொருளின் தரம், அதன் உற்பத்தி முறை மற்றும் சிறப்பம்சங்கள் அந்த இடத்தின் மண், காலநிலை அல்லது அங்கு வாழும் மக்களின் பாரம்பரிய திறமையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் போது அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இது ஒரு பொருளின் பூர்வீகத்தை உலகிற்கு பறைசாற்றும் முத்திரையாக செயல்படுகிறது. நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும்போது, அது உண்மையான இடத்திலிருந்து வந்த தரமான பொருள்தான் என்பதற்கு இது சான்றாக அமைக்கிறது. இந்த புவிசார் குறியீடு விவசாயம், கைவினை, உணவு, இயற்கை மற்றும் கைத்தொழில் சார்ந்த பொருட்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க: சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு…நூல்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பொதுமக்கள்!

74 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு:

புவிசார் குறியீடு என்பது ஒரு மண்ணின் பாரம்பரியத்தையும், அந்த மக்களின் உழைப்பையும் அங்கீகரிக்கும் உலகளாவிய கவுரவம் ஆகும். இது போலித் தயாரிப்புகளிடம் இருந்து உண்மையான உள்ளூர் உற்பத்தியாளர்களை காக்கும் ஒரு கேடயமாகவும் திகழ்கிறது. அந்த வகையில் புவிசார் குறியீடு பெறுவதில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், விளையும் 74 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. சமீபத்தில் உறையூர் பருத்திச் சேலை, கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை, நாமக்கல் கல் சட்டி, தூயமல்லி அரிசி, அம்பாசமுத்திரம் சொப்புச் சாமான்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றன.

எந்தெந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு:

இதுவரை புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற 74 பொருட்களில் கைவினை பொருட்கள் பிரிவில் 38 பொருட்களுக்கும், உணவுப் பொருட்கள் பிரிவில் 9 பொருட்களுக்கும், உற்பத்திப் பொருட்கள் பிரிவில் 3 பொருட்களுக்கும், விவசாயப் பொருட்கள் பிரிவில் 24 பொருட்களுக்கும் கிடைத்திருப்பதாக தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை புள்ளிவிவரங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் வரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருந்த நிலையில், கடந்த 21 மாதங்களில் 16 பொருட்களுக்கு மேலும் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

2வது இடத்தில் தமிழகம்:

இதன் மூலம் புவிசார் குறியீடு பெறுவதில் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உத்தரபிரதேச மாநிலம் 77 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது. இந்த புவிசார் குறியீடு மாநிலத்தின் செழுமையான பாரம்பரியம், திறமையான கைவினைத் திறன் மற்றும் விவசாய சிறப்பை பிரதிபலிக்கிறது.

மேலும் படிக்க: தமிழகம்-மேற்கு வங்கம் இடையே அம்ரித் பாரத் ரயில்கள்.. கால அட்டவணையை வெளியிட்ட தெற்கு ரயில்வே!!

அத்துடன் புகழ்பெற்ற கைத் தறி மற்றும் கைவினைப் பொருட்கள் முதல் தனித்துவமான விவசாய விளைபொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் வரை, புவியியல் குறியீடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் தனித்துவமான அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுகின்றன.

Follow Us