Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு…நூல்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பொதுமக்கள்!

Chennai Book Fair: சென்னையில் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சென்னை புத்தக கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்த கண்காட்சியில் ஏராளமான பொது மக்கள் போட்டிபோட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர். நிறைவு விழா மாலையில் நடைபெறஉள்ளது.

சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு…நூல்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பொதுமக்கள்!
சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 21 Jan 2026 13:22 PM IST

சென்னை நந்தனம் ஒய். எம். சி. ஏ. மைதானத்தில் கடந்த ஜனவரி 8- ஆம் தேதி ( வியாழக்கிழமை) 49- ஆவது சென்னை புத்தக கண்காட்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார். இந்த கண்காட்சியில், சுமார் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டு, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் மற்றும் குழந்தைகள் புத்தகங்கள், அரசியல் புத்தகங்கள், இலக்கிய நூல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கடந்த 14 நாட்களாக நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். இந்த புத்தக கண்காட்சியில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டிருப்பது பெரிதும் பயனுள்ளதாக இருப்பதாக புத்தக கண்காட்சிக்கு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றுடன் நிறைவடைகிறது சென்னை புத்தக கண்காட்சி

மேலும், இந்த ஆண்டு நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பொது மக்களுக்கு நுழைவு கட்டணம் இன்றி இலவசமாக அனுமதி வழங்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தின​மும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தக காட்சி நடை​பெற்று வந்தது. இவ்வளவு சிறப்பு மிக்க சென்னை புத்தக கண்காட்சி இன்று புதன்கிழமையுடன் ( ஜனவரி 21) நிறைவடைகிறது. இதையொட்டி, இன்று மாலை நடைபெறும் புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் பங்கேற்கிறார்.

மேலும் படிக்க: தமிழகம்-மேற்கு வங்கம் இடையே அம்ரித் பாரத் ரயில்கள்.. கால அட்டவணையை வெளியிட்ட தெற்கு ரயில்வே!!

பதிப்பாளர்கள் கெளரவிக்கப்பட உள்ளனர்

மேலும், இந்த விழாவில் பதிப்பு துறையில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் பதிப்பாளர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். சென்னையில் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிக்கு என ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. அதன்படி, ஒவ்வொரு ஆண்டு இறுதியும் புத்தக கண்காட்சிக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எழும்.

புத்தகங்களை போட்டி போட்டு வாங்கி சென்ற பொதுமக்கள்

அதன்படி, இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி கடந்த ஜனவரி 8-ஆம் தேதி முதல் ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், ஏராளமான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பல்வேறு வகையான தலைப்பில் இடம் பெற்றிருந்த புத்தகங்களை புத்தக விரும்பிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். மேலும், புத்தக கண்காட்சிக்கு வரும் பொது மக்களை அழைத்து செல்வதற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு இருந்தன.

மேலும் படிக்க: தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை…2 படகுகளையும் பறிமுதல் செய்தது!