Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை…2 படகுகளையும் பறிமுதல் செய்தது!

Mayiladuthurai Fishermen Arrest : நடு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றது. மேலும், அவர்கள் பயன்படுத்திய 2 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்து கொண்டு சென்றது .

தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை…2 படகுகளையும் பறிமுதல் செய்தது!
மயிலாடுதுறை மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 21 Jan 2026 07:47 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் அவ்வப்போது, கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்வது வழக்கமாகும். இது அவர்களின் தொழிலாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது இரண்டு படகுகளில் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள், இன்று புதன்கிழமை ( ஜனவரி 21) அதிகாலை இலங்கை மாநிலம், யாழ்ப்பாணம் அருகே உள்ள காங்கேஷன் வடக்கு கடல் பரப்பு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி எந்த வித முன் அறிவிப்பும் இன்றி தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது. இதைத் தொடர்ந்து, தமிழக மீனவர்கள் பயன்படுத்திய 2 நாட்டு படகுகளுடன் கைது செய்து காரை நகர் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றது. அங்கு, மீனவர்களிடம் இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீன் வளத்துறை அதிகாரியிடம் மீனவர்கள் ஒப்படைப்பு

இந்த விசாரணைக்கு பிறகு யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்பறையினர் அவர்களை கைது செய்யும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தி அவர்களை சிறையில் அடைத்து வருகின்றனர். சில மீனவர்கள் மட்டுமே விசாரணைக்கு பின்னர் உடனடியாக திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

மேலும் படிக்க: கோவையில் ரூ.2.5 கோடியில் மின்விசை படிக்கட்டுடன் கூடிய நடைமேம்பாலம்…என்ன வசதிகள்..எங்கு அமைகிறது!

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகோரி…

இல்லையெனில், அவர்களை சிறையில் அடைத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்படுகின்றனர். அதுவும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வலியுறுத்தியதன் அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். இது தொடர்பாக தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பல்வேறு முறை கடிதம் எழுதி வருகிறார். அதன் பேரில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில், மீனவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

தொடர் கதையாகி வரும் தமிழக மீனவர் கைது

முந்தைய காலத்தில் இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களுடன் மோதலில் ஈடுபடுவதுடன், அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்போது, அது போன்ற சம்பவங்கள் பெரும்பாலும் நடைபெறுவதில்லை என்றாலும், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

மேலும் படிக்க: கரூரில் சோக சம்பவம்…பைக் மீது மோதிய பேருந்து..ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!