மதுரை எல்ஐசி அலுவலக தீ விபத்து சம்பவம்…மேலாளர் உயிரிழப்பில் திடீர் திருப்பம்…உதவி மேலாளரின் கொடூர செயல்!
Madurai LIC Office Fire: மதுரை எல்ஐசி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உதவி மேலாளருக்கு முக்கிய தொடர்பு இருப்பதும், அவர் கொடூர் செயிலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
மதுரை சந்திப்பு ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் 2- ஆவது மாடியில் எல். ஐ. சி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17- ஆம் தேதி (புதன்கிழமை) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் திருநெல்வேலியை சேர்ந்த எல். ஐ. சி. அலுவலகத்தின் முதுநிலை மேலாளரான கல்யாணி (55 வயது) உடல் கருகி உயிரிழந்தார். இதே போல, உதவி மேலாளர் ராமு தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எல். ஐ. சி. அலுவலகத்தில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டிருந்தது. இதனிடையே, இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
உதவி மேலாளரை எச்சரித்தை மேலாளர்
இந்த விசாரணையில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், எல். ஐ. சி. அலுவலகத்தில் (டெத் கிளைம்) பாலிசியை வழங்காமல் உதவி மேலாளர் ராமு தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மேலாளர் கல்யாணியிடம் முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது, உதவி மேலாளர் ராமுவை, மேலாளர் கல்யாணி எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பேன் என்று மேலாளர் கல்யாணி தெரிவித்துள்ளாராம்.
மேலும் படிக்க: “எங்களை மன்னித்து விடுங்கள் ஐயா”…தமிழக டிஜிபிக்கு 1500 போலீசார் கடிதம்…என்ன காரணம்!




மேலாளரை பெற்றோல் ஊற்றி கொலை செய்த உதவி மேலாளர்
இதனால், உதவி மேலாளர் ராமு மற்றும் முதுநிலை மேலாளர் கல்யாணி இடையே மோதல் போக்கு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முதுநிலை மேலாளர் கல்யாணி மீது உதவி மேலாளர் ராமு ஆத்திரத்தில் இருந்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் கல்யாணியை தீர்த்து கட்டுவதற்கு ராமு திட்டம் தீட்டி உள்ளார். அதன்படியே, உதவி மேலாளர் ராமு ஒரு கேனில் பெட்ரோலை வாங்கி வந்து மேலாளர் கல்யாணி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்
மேலும், இது மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாக கூறி நம்ப வைத்துள்ளது போலீசார் விசாரணை தெரிய வந்தது. இதை தொடர்ந்து, உதவி மேலாளர் ராமுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது. டெத் கிளைம் பாலிசிக்காக மேலாளரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: யூடியூப் வீடியோவால் வந்த வினை…உடல் எடையை குறைப்பதற்காக நாட்டு மருந்து சாப்பிட்ட மாணவி…அடுத்து நடந்த விபரீதம்!