“நம்மை பிடிக்காத சிலரும் கூட்டணியில் இருப்பார்கள்”.. மா.செ கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பரபர பேச்சு!!
CM Stalins sensational speech: 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக தேர்தலில் 100 சதவீதம் களப் பணியாற்ற வேண்டும் என அவர் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற பெயரில் திருச்சியில் வரும் மார்ச் 8ம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை, ஜனவரி 20: சட்டமன்ற தேர்தல் குறித்து திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கூட்டணி கட்சிகளை எப்படி கையாள்வது, தேர்தல் பிரச்சார பணிகள் எப்படி மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதோடு, தேர்தலுக்காக களப்பணி செய்வது குறித்தும் முதல்வர் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுதித்தியதாக தெரிகிறது. மேலும், இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: தவெக தேர்தல் அறிக்கை குழு லிஸ்டில் பெயர் மிஸ்ஸிங்.. விஜய் மீது செங்கோட்டையன் அப்செட்?.. வெளியான விளக்கம்!!
பரபரக்கும் தமிழக அரசியல் களம்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆட்சியை தக்க வைக்க திமுக, இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்துவிட அதிமுகவும் போராடி வருகிறது. இதனிடையே, இத்தேர்தலில் புதிதாக விஜய்யின் தவெகவும் களம் காண்கிறது. இதனால், தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத அளவு பரபரப்பாக காணப்படுகிறது. ஏனெனில், விஜய்யின் தங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தருவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால், அனைத்து கட்சிகளின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரம் கேட்டு அழுத்தமும் கொடுத்து வருகின்றன.




மா.செ., கூட்டத்தில் முக்கிய முடிவுகள்:
இப்படி பரபரப்பான சூழ்நிலையில், சென்னையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டது. களப்பணிகள், பூத் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதோடு, “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற பெயரில் திருச்சியில் வரும் மார்ச் 8ம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மதுரை எல்ஐசி அலுவலக தீ விபத்து சம்பவம்…மேலாளர் உயிரிழப்பில் திடீர் திருப்பம்…உதவி மேலாளரின் கொடூர செயல்!
மா.செக்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்:
மேலும், முதல்வர் ஸ்டாலினும் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன்படி, நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். தேர்தல் நெருங்கிவிட்டது, இனி நம் சிந்தனை – செயல் எல்லாமே வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதோடு, கூட்டணி கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்வார்கள். தேவையில்லாத கருத்துகளை பேசி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அவர்கள் நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகக் கூடாது. கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை நான் பார்த்துக் கொள்கிறேன். 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக தேர்தலில் 100 சதவீதம் களப் பணியாற்ற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.