Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆண்களுக்கும் இலவச பயண வாக்குறுதி ஏன்?.. ராஜேந்திர பாலாஜியின் அடடே விளக்கம்!!

admk election manifesto: 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன பிறகு, மகளிருக்காக மாதம் ரூ.2000 வழங்கும் திட்டத்தில் தான் முதல் கையெழுத்திடுவார் என ராஜேந்திர பாலாஜி உறுதி. அதோடு, எதற்காக ஆண்களுக்கும் பேருந்தில் இலவசம் அறிவித்தோம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஆண்களுக்கும் இலவச பயண வாக்குறுதி ஏன்?.. ராஜேந்திர பாலாஜியின் அடடே விளக்கம்!!
ராஜேந்திர பாலாஜி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 20 Jan 2026 18:15 PM IST

விருதுநகர், ஜனவரி 20: மனைவியோடு, காதலியோடு இலவசமாக பயணித்து சினிமாவிற்கு செல்லலாம், ஊர் சுற்றலாம் என்பதற்காகத்தான் ஆண்களுக்கும் இலவச பயணத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. மக்கள் சந்திப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என பரபரப்பாக இயங்கி வருகின்றன. இதனிடையே, தேர்தல் வாக்குறுதிகள் தயாரிக்க திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட மூன்று கட்சிகளும் முழு அமைத்துள்ளன. இந்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடையே கருத்து கேட்டு வருகிறது.

மேலும் படிக்க: யூடியூப் வீடியோவால் வந்த வினை…உடல் எடையை குறைப்பதற்காக நாட்டு மருந்து சாப்பிட்ட மாணவி…அடுத்து நடந்த விபரீதம்!

அதிமுக முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகள்:

தொடர்ந்து, அவர்கள் பல்வேறு தரப்பிடம் இருந்தும் கருத்துகளை பெற்று, விரைவில் வாக்குறுதிகளை வெளியிட உள்ளன. இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடு இல்லாதவர்களுக்கு அரசே இலவசமாக வீடு கட்டித் தரும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், ஏற்கனவே நகரப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

ரூ.2000 தான் முதல் கையெழுத்து:

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன பிறகு, மகளிருக்காக மாதம் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் முதலில் கையெழுத்து இடுவார் என தெரிவித்தார். ​​பெண்கள் மட்டும் பேருந்துகளில் இலவசமாக பயணித்து வந்த நிலையில், இனி ஆண்களும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் கூறினார்.

மேலும் படிக்க: மதுரை எல்ஐசி அலுவலக தீ விபத்து சம்பவம்…மேலாளர் உயிரிழப்பில் திடீர் திருப்பம்…உதவி மேலாளரின் கொடூர செயல்!

குடும்பத்தை பரித்த திமுக அரசு:

மகளிருக்கு மட்டும் இலவச பயணத்தை அறிவித்து ஒன்றாக இருந்த குடும்பத்தை திமுக அரசு பிரித்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், அதிமுக அரசு அமைந்ததும் ஆண்களுக்கும் இலவச பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருவரையும் இனி பயணங்களில் சேர்த்து அனுப்பி வைக்க உள்ளதாக நகைச்சுவையாக கூறினார். மேலும், மனைவியோடு, காதலியோடு இலவசமாக பயணித்து சினிமாவுக்கு செல்லலாம், ஊர் சுற்றலாம் என்பதற்காகத்தான் ஆண்களுக்கும் இலவச பயணத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.