Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாஜக கூட்டணியில் இணைகிறதா அமமுக?டிடிவி தினகரன் கூறிய பதில்!

TTV Dhinakaran Latest Pressmeet: தேசிய ஜனநாயக கூட்டணில் இணைய உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மறைமுகமாக தெரிவித்துள்ளார். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகு என்று குறிப்பிட்டார். அவர் என்ன கூறினார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பாஜக கூட்டணியில் இணைகிறதா அமமுக?டிடிவி தினகரன் கூறிய பதில்!
தேஜ கூட்டணியில் இணைகிறதா அமமுக
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 17 Jan 2026 14:32 PM IST

சென்னையில் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026 சட்டமன்ற தேர்தலில் உறுதியாக எந்த கட்சியும் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம்பெறுகின்ற கட்சிதான் உறுதியாக வெற்றியை பெரும். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் எங்களை கூட்டணிக்கு வர வேண்டும் என்று சில நல்ல உள்ளங்கள் கூறியது. ஆனால், கூட்டணிக்கு வர முடியவில்லை. தற்போதும், அந்த நல்ல உள்ளங்கள் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி வரவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். எனவே, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் உங்கள் கட்சிக்கும் பங்கு உள்ளது.

அமமுக கூட்டணி குறித்து உரியவர்கள் அறிவிப்பார்கள்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர். அவர்களுக்கு எவ்வளவு கோடியோ விலை பேசப்பட்டும், அவர்கள் விலை போகாமல் உள்ளனர். நான் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவு எடுக்கவில்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள். எனவே, கூட்டணி தொடர்பாக உரியவர்கள் அறிவித்த பிறகு மக்களுக்கு தெரிய வரும். நான் ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்குகிறேன் என்றால், அந்த கூட்டணி குறித்த அறிவிப்பை நான் வெளியிடலாம்.

மேலும் படிக்க: பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுக்கு அழைப்பில்லை….ஓ.பன்னீர் செல்வம்!

நான் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட முடியாது

ஆனால், நான் ஒரு கூட்டணியில் இணைய போகிறேன் என்பதால். அந்த கூட்டணி குறித்த அறிவிப்பை, அந்த கூட்டணியின் தலைவர் தான் வெளியிடுவார். தமிழகத்தில் உறுதியாக கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை உள்ளது. இது அனைத்து கூட்டணிகளுக்கும் தலைமை தாங்கும் கட்சிகளுக்கும் தெரியும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தேர்தல் அறிவிப்புகளை பொதுமக்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கூட்டணியில் இணைவதாக வாக்குறுதி அளித்துள்ளேன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தது போல பேனர் வைக்கப்பட்டுள்ளதற்கு நான் எப்படி பதில் கூற முடியும். அந்த பேனர் கமலாலயம் சார்பில் வைக்கப்பட்டிருந்தால் அதற்கு நான் பதில் அளித்து இருப்பேன். அமமுக பொதுக் குழுவில் தெரிவித்தது தான் எங்களது நிலைப்பாடு ஆகும். நான் ஒரு கூட்டணியில் இணையப் போகிறேன் என்று வாக்குறுதி அளித்து இருக்கிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு பாஜக அழுத்தம் கொடுத்ததா என்பது தெரியவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: மகளிருக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை…ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம்…அதிமுகவின் அசத்தல் தேர்தல் வாக்குறுதி!