Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொடர் விடுமுறை.. மாதவரம், மணலி ஏரிகளுக்கு படையெடுத்த மக்கள்.. படகு சவாரி கட்டணம் குறைப்பு!!

Madhavaram & Manali lakes boat ride: புதிதாகத் திறக்கப்பட்ட மாதவரம் மற்றும் மணலி ஏரிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். கடந்த 2 நாட்களை விட இன்றைய தினம் அதிகளவில் மக்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றப்படி இரண்டு ஏரிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை.. மாதவரம், மணலி ஏரிகளுக்கு படையெடுத்த மக்கள்.. படகு சவாரி கட்டணம் குறைப்பு!!
புழல், மாதவரம் ஏரி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Jan 2026 12:30 PM IST

சென்னை, ஜனவரி 17: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் புனரமைக்கப்பட்ட மாதவரம் மற்றும் மணலி ஏரிகளில் படகு சவாரி களைகட்டியுள்ளது. குறிப்பாக இன்று காணும் பொங்கலையொட்டி, அதிக அளவிலான மக்கள் ஏரி, கடற்கரை, பூங்கா போன்ற பொது இடங்களில் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் வண்ண விளக்குகலால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. அதோடு, சென்னை மாநகர காவல்துறையினர் கடற்கரை மற்றும் பொது இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். அதேபோல், அசம்பாவிதம் ஏற்பட்டாடல் உடனடியாக செயல்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: காணும் பொங்கலுங்கு குடும்பத்துடன் வெளியே போறீங்களா.. சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!!

மாதவரம், மணலி ஏரி புனரமைப்பு:

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.24.41 கோடி செலவில் மாதவரம் மற்றும் மணலி ஏரிகள் புதுப்பிக்கப்பட்டு, பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஏரிகளிலும் பல்வேறு வசதிகளுடன் கூடிய படகு சவாரி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதிகளை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா இம்மாதம் 13ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தனர்.

படகு சவாரிக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்:

இந்நிலையில், பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை நாட்களில், புதிதாகத் திறக்கப்பட்ட மாதவரம் மற்றும் மணலி ஏரிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். அவர்கள் குழுப் படகுகள், வாட்டர் ஸ்கூட்டர்கள் மற்றும் மிதி படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகை தந்ததால், அந்தப் பகுதி முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. அதோடு, படகு சவாரிகளுக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று காணும் பொங்கல் என்பதால், கடந்த 2 நாட்களை விட இன்றைய தினம் அதிகளவில் மக்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றப்படி இரண்டு ஏரிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போக முடியாது.. நோட் பண்ணுங்க..

படகு சவாரி கட்டணம் குறைப்பு:

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் படகு சவாரி கட்டணங்களைக் குறைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நேற்று காலை முதல், 8 பேர் அமரக்கூடிய மோட்டார் படகிற்கான 10 நிமிடக் கட்டணம் ரூ.800ல் இருந்து ரூ.500 ஆகவும், 4 பேர் அமரக்கூடிய மிதி படகிற்கான 20 நிமிடக் கட்டணம் ரூ.400ல் இருந்து ரூ.300 ஆகவும், 2 பேர் அமரக்கூடிய மிதி படகிற்கான கட்டணம் ரூ.300ல் இருந்து ரூ.200 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தங்கள் கோரிக்கையை ஏற்று படகு சவாரி கட்டணங்களைக் குறைத்த அரசுக்குப் பொதுமக்கள் தங்களின் நன்றியைத் தெரிவித்தனர்.