Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காணும் பொங்கலுங்கு குடும்பத்துடன் வெளியே போறீங்களா.. சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!!

Kaanum Pongal in chennai: சென்னை முழுவதும் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காணும் பொங்கலுங்கு குடும்பத்துடன் வெளியே போறீங்களா.. சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Jan 2026 07:45 AM IST

சென்னை, ஜனவரி 16: காணும் பொங்கலையொட்டி, நாளை (ஜனவரி 17) அதிக அளவிலான மக்கள் கடற்கரை, பூங்கா போன்ற பொது இடங்களில் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் வண்ண விளக்குகலால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில், சென்னை மாநகர காவல்துறையினர் கடற்கரை மற்றும் பொது இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். அதேபோல், அசம்பாவிதம் ஏற்பட்டாடல் உடனடியாக செயல்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : தைப்பொங்கல் பண்டிகை.. தமிழர் வாழ்வு செழித்திட முதல்வர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் வாழ்த்து!!

குழந்தைகளுக்கு பிரத்யேக பேண்ட்:

குழந்​தைகள் காணா​மல் போவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளதோடு, மெரி​னா​வில் குளிக்​க​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. அதாவது, கடற்​கரைக்கு பெற்​றோருடன் வரும் குழந்​தைகள் கூட்ட நெரிசலில் காணா​மல் போனால் அவர்​களை உடனடி​யாக மீட்​ப​தற்​காக குழந்​தைகள், சிறு​வர்​கள் மற்​றும் சிறுமிகளின் கைகளில் பிரத்​யேக அடை​யாளப் பட்டை (பேண்ட்) கட்​டி​விடப்பட உள்​ளது. குழந்​தைகளு​டன் வரும் பெற்​றோர்​களிடம் விவரங்​கள் பெறப்​பட்​டு, பிரத்​யேக அடை​யாளப் பட்​டை​யில் குழந்​தை​யின் பெயர், பெற்​றோர் பெயர், முகவரி மற்​றும் செல்​போன் எண் ஆகிய​வற்றை எழு​தி, குழந்​தைகளின் கைகளில் கட்டி அனுப்​பிவைப்​பார்​கள். இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ள தகவலில்,

1. சென்னை பெருநகர காவல்துறை, 16,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2. காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

3. கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் புறவழிச் சாலை, ஜிஎஸ்டி சாலை மற்றும் இதர சாலைகளில் இருசக்கர வாகன பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

4. மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்பில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் ஏடிவி (ATV All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்படுவர்.

5. கடற்கரை உயிர் காக்கும் பிரிவின் (Anti Drowning team) காவல் ஆளிநர்கள் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் தீவிரமாக கண்காணிக்கப்படுவர்.

6. அவசர உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

7. குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட கைகளில் கட்டப்படும் பேண்ட் வழங்கப்படும்.

8. மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் (Drone Camera) மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படும்.

9. உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள், 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள்.

10. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள்.

11. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 1 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை காவல் உதவி மையங்கள் மற்றும் 3 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள்.

12. சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.