Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசுப் பணி…முதல்வர் அறிவிப்பு!

Alanganallur Jallikattu Competition: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். ஜல்லிக் கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் மாடு பிடி வீரருக்கு கால்நடை பராமரிப்பு துறையில் அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசுப் பணி…முதல்வர் அறிவிப்பு!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்வர் பங்கேற்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 17 Jan 2026 13:20 PM IST

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன. இந்த நிலையில், உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரில் இன்று சனிக்கிழமை ( ஜனவரி 17) காலை ஜல்லிக்கட்டு போட்டிகளை பத்திர பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, வாடி வாசலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு காளையர்கள் களமாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு, முதல்வர் மு. க. ஸ்டாலின் வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி, முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று காலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து அலங்காநல்லூருக்கு சாலை மார்க்கமாக காரில் வந்தடைந்தார்.

அலங்காநல்லூரில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

அவருக்கு சாலைகளின் இரு புறங்களிலும் பொது மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து, இன்று காலை சுமார் 11 மணி அளவில் ஜல்லிக்கட்டு நடைபெறும் திடலுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வருகை தந்தார். அவருக்கு, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இதை தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் காளை மாட்டு வண்டியை பரிசாக வழங்கினார்.

மேலும் படிக்க: பாலமேடு ஜல்லிக்கட்டுடன் சன்‌ஃபீஸ்ட் சூப்பர்மில்க் நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசுப் பணி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு இலவச சொகுசு கார் மற்றும் அரசுப் பணிக்கான அறிவிப்பை முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்க உள்ளார். நிகழ்வில், முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசுகையில், அதிக காளைகளை அடக்கி முதல் இடம் பெறு வீரருக்கு தமிழக கால்நடை பராமரிப்பு துறையில் அரசுப் பணி வழங்கப்படும். மேலும், அலங்காநல்லூரில் ரூ.2 கோடியில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம், உயர்தர சிகிச்சை மையம் அமைப்படும் என்று தெரிவித்தார்.

கார்-டிராக்டர் உள்பட பல்வேறு பரிசுகள்

இதே போல, சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 2- ஆம் பரிசு பெறும் மாடு பிடி வீரர் மற்றும் காளைகளின் உரிமையாளருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதே போல, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று சிறப்பாக களமாடி இருக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி நாணயம், பீரோ, கட்டில், வேட்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும் படிக்க: கோலாகலமாக தொடங்கிய அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு..