Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாசிசவாதிகளை விரட்டி தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

Deputy CM Udhayanidhi Stalin: பாலமேடு ஜல்லிக்கட்டை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். அதே சமயத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசித்தார். அந்த வகையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

பாசிசவாதிகளை விரட்டி தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Jan 2026 17:11 PM IST

மதுரை, ஜனவரி 16, 2026: உலகில் நிகரற்ற நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் பாசகவாதிகளை விரட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் என்றும் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு ஜனவரி 16, 2026 தேதியான இன்று தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி:

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 100-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அதில், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளாக அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் கருதப்படுகின்றன. அந்த வகையில், பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அடக்கும் இளைஞர்களுக்கு பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்படும். அதில், அதிக எண்ணிக்கையில் காளைகளை பிடிக்கும் இளைஞர்களுக்கு கார், பைக் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகள் பல மாதங்களுக்கு முன்பே தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதேபோல், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்களும் தகுந்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பாசிசவாதிகளை விரட்டி தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்:


இந்த சூழலில், பாலமேடு ஜல்லிக்கட்டை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். அதே சமயத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசித்தார். அந்த வகையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில், “ மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற – தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை இன்று தொடங்கி வைத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தோம்.

வாடிவாசலில் சீறி வரும் காளைகள் – வீரத்தை வெளிப்படுத்தும் மாடுபிடி வீரர்கள் – ஆர்வமிக்க பார்வையாளர்கள் என பாலமேடு ஜல்லிக்கட்டு உற்சாகமூட்டியது.

உலகில் நிகரற்ற நமது பாரம்பரியம் – கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் பாசிசவாதிகளை வீழ்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் என்றும் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்.

பாலமேட்டில் களம் கண்டுள்ள வீரர்களுக்கும் – காளைகளின் உரிமையாளர்களுக்கும் – ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கும் எனது அன்பும் வாழ்த்தும்.” என குறிப்பிட்டுள்ளார்.