AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஜல்லிக்கட்டு - Jallikattu

ஜல்லிக்கட்டு - Jallikattu

பொங்கல் என்றாலே சட்டென நினவுக்கு வருவது ஜல்லிக்கட்டு தான். மதுரையை பொறுத்தவரை அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. இதனை காண உலகம் முழுவதிலும் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிக்காக மாடுகளை அதன் உரிமையாளர்கள் தயார் செய்து வருகின்றனர். இது தவிர பிற ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிகட்டுப் போட்டிகளுக்கு அரசு சார்பில் சில வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படியே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பல ரூல்ஸ் உள்ளன. அதன்படியே அவை களமிறக்கப்படுகின்றன

Read More

. உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக ஜல்லிக்கட்டு!

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றன. அதுமட்டுமின்றி சட்டமன்ற தொகுதிகள் சார்பாகவும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி!

பொங்கல் பண்டிகைக்கு பிறகு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மேலூர் சட்டமன்ற தொகுதி சார்பில், மதுரை கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சீறிப்பாய்ந்த காலைகளை, மாடு பிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை பெற்றனர். 

ஜல்லிக்கட்டு போட்டி விதிமுறைகளில் சில தளர்வுகள்…என்ன அது…வீரர்கள் மகிழ்ச்சி!

Jallikattu Competitions: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதில் உள்ள சில விதிகளில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இது, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துபவர்கள் மற்றும் மாடு பிடி விீரர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அது என்ன தளர்வுகள் என்பதை பார்க்கலாம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்றது யார்? என்ன பரிசு?

Alanganallur Jallikattu : காணும் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி 17, 2026 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் வென்றவர்களுக்கு முதல்வர் கையால் கார் பரிசளிக்கப்படவிருக்கிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசுப் பணி…முதல்வர் அறிவிப்பு!

Alanganallur Jallikattu Competition: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். ஜல்லிக் கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் மாடு பிடி வீரருக்கு கால்நடை பராமரிப்பு துறையில் அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

கோலாகலமாக தொடங்கிய அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு..

Alanganallur Jallikattu: ஒருபக்கம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், மற்றொரு பக்கம் ஜல்லிக்கட்டு போட்டிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, மதுரையில் கோலகலமாக தொடங்கியது.

பாலமேடு ஜல்லிக்கட்டுடன் சன்‌ஃபீஸ்ட் சூப்பர்மில்க் நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், நாட்டுமாடுகளின் முக்கியத்துவத்தையும் கொண்டாடும் வகையில், சன்‌ஃபீஸ்ட் சூப்பர்மில்க் இந்த ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்று வருகிறது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு தொடர்பு செயல்பாடுகள், பிரபலங்கள் வருகை உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுகின்றன. தமிழ்நாட்டின் நாட்டுமாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு “ஊகிப்பு விளையாட்டு” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாசிசவாதிகளை விரட்டி தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

Deputy CM Udhayanidhi Stalin: பாலமேடு ஜல்லிக்கட்டை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். அதே சமயத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசித்தார். அந்த வகையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

சூரியூர் ஜல்லிக்கட்டு.. சீறிப் பாய்ந்த 700 காளைகள்!

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்றது. இதில் சுமார் 700 காளைகள் மற்றும் 500 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். திருச்சியில் உள்ள நற்கடல் குடி குப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரினாவில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

சென்னையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது தான் மெரினா கடற்கரை. இதன் காரணமாக எப்போதுமே மெரினாவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டு.. சீறி பாயும் காளைகள், அடக்கும் வீரர்கள்.. முன்னிலை நிலவரம்!!

2026 Madurai Palamedu Jallikattu: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு தாமதமானதால், போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. அதாவது, 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, காலை 9 மணிக்கு தொடங்கியது.

பாலமேட்டில் பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகள்.. நேரில் வந்த உதயநிதி

தமிழர்களின் பொங்கல் பண்டிகை என்றாலே தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தவறாது இடம்பெறும். குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூரில் ஜல்லிக்கட்டு மிக பிரபலம். இந்நிலையில் மாட்டுப்பொங்கலான இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்

பாலமேடு ஜல்லிகட்டு போட்டி.. தயாராக இருக்கும் வீரர்கள், காளைகள்.. போட்டி நேரத்தில் திடீர் மாற்றம்..

Palamedu Jallikattu 2026: உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அந்தவகையில், நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில், இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. நேற்று சரியான நேரத்திற்கு திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்று போட்டி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடித்த வீரர் யார்? என்ன பரிசு?

Avaniyapuram Jallikattu 2026 : பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ. 8 லட்சம் மதிப்புள்ள காரும், வெற்றிபெற்ற காளைக்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள டிராக்டரும் வழங்கப்படும் என அறிவக்கப்பட்டுள்ளது.

சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு!

பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. காலை முதலே உலகத்தமிழர்கள் வீடுகளில் பொங்கலை வைத்து சூரியனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொங்களில் சிறப்பாக மதுரைஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது. சீறிப்பாயும் மாடுகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயற்சி செய்து வருகின்றனர்