பாலமேடு ஜல்லிக்கட்டுடன் சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள்.. சிறப்பு அம்சங்கள் என்ன?
தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், நாட்டுமாடுகளின் முக்கியத்துவத்தையும் கொண்டாடும் வகையில், சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் இந்த ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்று வருகிறது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு தொடர்பு செயல்பாடுகள், பிரபலங்கள் வருகை உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுகின்றன. தமிழ்நாட்டின் நாட்டுமாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு “ஊகிப்பு விளையாட்டு” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை, ஜனவரி 16, 2026: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியுடன் இணைந்து, சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் நிறுவனம் சிறப்பு செயல்பாடுகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் ஜனவரி 16, 2026 தேதி இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், நாட்டுமாடுகளின் முக்கியத்துவத்தையும் கொண்டாடும் வகையில், சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் இந்த ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்று வருகிறது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு தொடர்பு செயல்பாடுகள், பிரபலங்கள் வருகை உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்வில் மூன்று முக்கிய சிறப்பு அம்சங்கள் இடம் பெறுகின்றன:
முதல் அம்சமாக, தமிழ்நாட்டின் நாட்டுமாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு “ஊகிப்பு விளையாட்டு” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், புலிக்குளம் மாடு – மதுரை, காங்கேயம் மாடு – ஈரோடு / திருப்பூர் போன்ற வகையில், மாடுகளின் இனங்களையும் அவற்றின் புவியியல் பகுதிகளையும் பொருத்தி இணைக்க வேண்டிய விளையாட்டு இடம்பெறுகிறது. இந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள QR கோடினை ஸ்கேன் செய்தால், நாட்டுமாடுகளின் முக்கியத்துவம் மற்றும் அவை தமிழ்நாட்டின் சமூக அமைப்பில் அளிக்கும் பங்களிப்பு குறித்த தகவல்கள் கொண்ட இணையப் பக்கத்துக்கு பார்வையாளர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.
இரண்டாவது அம்சமாக, “சூப்பர்மில்க் சவால்” என்ற விளையாட்டு நடத்தப்படுகிறது. இதில், பங்கேற்பாளர்கள் சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் பிஸ்கட்டினை பாலில் நனைத்து, அது உடையாமல் சாப்பிட வேண்டும். அதனுடன் முழு கிளாஸ் பாலும் குடிக்க வேண்டும். இந்த சவாலை வெற்றிகரமாக முடிக்கும் நபர்கள் லக்கி டிரா மூலம் பரிசுகளை வெல்ல தகுதி பெறுவார்கள். இதில் சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் பாக்கெட்டுகள், கேப்புகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மூன்றாவது மற்றும் முக்கிய அம்சமாக, நாட்டுமாடு தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கூடம் (Photo Booth) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் நிறுவனத்தின் பிராண்டு தூதர்களான நடிகைகள் ஸ்நேகா மற்றும் சிம்ரன் ஆகியோரின் படங்களும் இடம்பெறுகின்றன. பார்வையாளர்கள் தங்களது பரிசுகளுடன் புகைப்படங்கள் எடுத்து, அவற்றை சமூக வலைதளங்களில் #NaatuMaatuPaal, #SunfeastSupermilk, #Jallikattu2026 என்ற ஹேஷ்டேக்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவில் நடைபெறும் இந்த சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் சிறப்பு நிகழ்ச்சிகள், பாரம்பரியம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.