AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக வானிலை அப்டேட்: வெப்பநிலை 38° வரை உயர்வு

Tamil Nadu Weather Forecast: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகிறது.வட கடலோர தமிழகத்தில் சில இடங்களில் வெப்பநிலை 2–3° செல்சியஸ் உயர்ந்துள்ளது. வேலூரில் அதிகபட்சமாக 38.3° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழக வானிலை அப்டேட்: வெப்பநிலை 38° வரை உயர்வு
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 06 Mar 2026 14:11 PM IST

சென்னை மார்ச் 06: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகிறது. வட கடலோர தமிழகத்தில் சில இடங்களில் வெப்பநிலை 2–3° செல்சியஸ் உயர்ந்துள்ளது.ன் வேலூரில் அதிகபட்சமாக 38.3° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 2026 மார்ச் 7 முதல் குறைந்தபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்.
மீனவர்களுக்கு தற்போது எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

கடந்த 24 மணி நேர வானிலை நிலவரம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக பொதுவாக வறண்ட வானிலை நிலவியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. மற்ற பகுதிகளில் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. தமிழகம் முழுவதும் சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் இயல்பை ஒட்டியே காணப்பட்டது.

Also Read: தமிழகத்தில் 2 நாட்கள் வெயில் கொளுத்தும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 38.3° செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை சமவெளி பகுதிகளில் திருத்தணியில் 19.4° செல்சியஸ் ஆக பதிவானது. மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 9.0° செல்சியஸ் என்ற அளவில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஏழு நாட்களுக்கான மழை முன்னறிவிப்பு

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

மார்ச் 8 முதல் 12 வரை வானிலை

2026 மார்ச் 8ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 9ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மார்ச் 10ஆம் தேதி இந்த பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 2026 மார்ச் 11 மற்றும் 12 தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெப்பநிலை மாற்றம் பற்றிய முன்னறிவிப்பு

2026 மார்ச் 6ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். 2026 மார்ச் 7 முதல் 10ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்க வாய்ப்பு குறைவு என கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 2026 மார்ச் 7 முதல் 10 வரை படிப்படியாக உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38° செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25° செல்சியஸ் வரைவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளை (மார்ச் 7) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு, அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை

தமிழக கடலோர பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மார்ச் 6 முதல் மார்ச் 10 வரை மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடி பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us