AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் 2 நாட்கள் வெயில் கொளுத்தும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil Nadu Will Face Extreme Heat For Two Says | விரைவில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் கொளுத்தும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் 2 நாட்கள் வெயில் கொளுத்தும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Mar 2026 06:35 AM IST

சென்னை, மார்ச் 06 : விரைவில் கோடைக்காலம் வரவுள்ள நிலையில், தமிழகத்தில் (Tamil Nadu) படிப்படியாக வெப்பம் உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் இதனை கூறியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை

தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் (மார்ச் 06, 2026) மற்றும் நாளை (மார்ச் 07, 2026) ஆகிய இரண்டு நாட்கள் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிசிடிவியில் சிக்குவார்களா கொள்ளையர்கள்? வியாபாரிடம் 3 கிலோ தங்கம் வழிபறி

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை

இது ஒருபுறம் இருக்க ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மார்ச் 08, 2026 அன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : O.Panneerselvam Tamil Nadu Election: திமுகவில் இணைந்த அதிமுவின் முக்கிய முகம் ஓ.பன்னீர் செல்வம்!

மிதமான மழை பெய்ய வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் மார்ச் 09, 2026 அன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழக பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Follow Us