AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிசிடிவியில் சிக்குவார்களா கொள்ளையர்கள்? வியாபாரிடம் 3 கிலோ தங்கம் வழிபறி

Daylight Robbery of 3 Kg Gold: விழுப்புரத்தில் பட்டப்பகலில் மொத்த தங்க நகை வியாபாரியான ராஜமாணிக்கம் மீது கத்திமுனையில் மிரட்டி கொள்ளை நடைபெற்றுள்ளது. சென்னைக்கு 3 கிலோ தங்க நகைகளை கொண்டு செல்லும் வழியில் முகமூடி அணிந்த கும்பல் அவரை பின்தொடர்ந்து வழிமறித்ததாக கூறப்படுகிறது.

சிசிடிவியில் சிக்குவார்களா கொள்ளையர்கள்? வியாபாரிடம் 3 கிலோ தங்கம் வழிபறி
தங்க நகை கத்திமுனையில் கொள்ளைImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 05 Mar 2026 13:30 PM IST

விழுப்புரத்தில் பட்டப்பகலில் மொத்த தங்க நகை வியாபாரியான ராஜமாணிக்கம் மீது கத்திமுனையில் மிரட்டி கொள்ளை நடைபெற்றுள்ளது. சென்னைக்கு 3 கிலோ தங்க நகைகளை கொண்டு செல்லும் வழியில் முகமூடி அணிந்த கும்பல் அவரை பின்தொடர்ந்து வழிமறித்ததாக கூறப்படுகிறது. கோட்டை விநாயகர் கோயில் அருகே பைக்கை நிறுத்த வைத்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. உயிர் அச்சத்தால் தங்க நகைகள் இருந்த பையை ராஜமாணிக்கம் ஒப்படைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளையில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் பறிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

விழுப்புரம் விராட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம்(43) மொத்த தங்க நகை வியாபாரியாக செயல்பட்டு வருகிறார். சென்னையில் மொத்தமாக தங்க கட்டிகளை வாங்கி வந்து ஜிமிக்கி, கம்மல், செயின் உள்ளிட்ட ஆபரணங்களாக தயாரித்து நகைக் கடைகளுக்கு விநியோகிப்பது அவரது வழக்கமான தொழிலாகும். இதற்காக வீட்டிலேயே நகை தயாரிக்கும் பட்டறை அமைத்து சுமார் பத்து ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறார்.

3 கிலோகத்துடன் சென்னை பயண தங்ம்

சமீபத்தில் 3 கிலோ தங்க கட்டிகளை உருக்கி ஆபரணங்களாக தயாரித்த ராஜமாணிக்கம், அவற்றை சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டார். 2026 மார்ச் 3 ஆம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் நோக்கில், தங்க நகைகள் இருந்த பையை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டார்.

Also Read: ராணிப்பேட்டை அருகே விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் கவலைக்கிடம்

முகமூடி கும்பல் வழிமறிப்பு

அப்போது கோட்டை விநாயகர் கோயில் அருகே முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை பின்தொடர்ந்து வந்து வழிமறித்தது. பைக்கை நிறுத்துமாறு கூறிய அவர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். நகைகள் இருந்த பையை ஒப்படைக்குமாறு கூறியபோது, அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கத்தியால் தாக்க முயன்றதால், உயிர் அச்சத்தில் பையை ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.3 கோடி மதிப்பில் நகை பறிப்பு

பையை பறித்துக் கொண்டு அந்த கும்பல் சில விநாடிகளில் தப்பிச் சென்றுள்ளது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. தகவல் அறிந்த விழுப்புரம் நகர காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

13 தனிப்படைகள் தீவிர தேடுதல்

ஏஎஸ்பி ரவீந்திரகுமார்குப்தா மற்றும் எஸ்பி சாய்பிரனீத் தலைமையில் 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா காட்சிகள் கைப்பற்றப்பட்டு, எல்லைப் பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தங்கம் வாங்கி செல்வதை முன்கூட்டியே கண்காணித்த கும்பலே இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us