AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

Restrictions on Private Schools: தமிழகத்தில் 58 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகிறது. 13 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. அரசியல் மற்றும் மத நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசிதழ் மூலம் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. பிரிவினையை தூண்டும் செயல்களுக்கு முழுத் தடை அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்
கோப்புப்படம் Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 05 Mar 2026 09:56 AM IST

தமிழகத்தில் 58 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன, இதில் 13 ஆயிரம் தனியார் பள்ளிகள் அடங்குகின்றன. தனியார் பள்ளிகளில் அரசியல் மற்றும் மத சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அரசியல், மத மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் அரசாணை வெளியிடப்பட்டது. பள்ளி வளாகங்களில் வெளிப்புற அமைப்புகளின் கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது. மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் செயல்பாடுகள் முழுமையாக தடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு

தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 58 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை தனியார் பள்ளிகள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தனியார் பள்ளிகளில் மத சார்ந்த நிகழ்வுகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்தன. இதையடுத்து அரசியல், மத மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை தனியார் பள்ளிகளில் நடத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை கல்வி சூழலை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: 11-ஆம் வகுப்பில் தோல்வியா? மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 2018ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்கள் பள்ளி நேரத்திலும், பள்ளி நேரத்திற்கு வெளியிலும் அரசியல் அல்லது வெளிப்புற அமைப்புகளின் நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கூட்டம், பிரச்சாரம் அல்லது வெளிப்புற நபர்களின் செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. பள்ளிகளின் கல்வி நோக்கத்துடன் தொடர்பில்லாத செயல்பாடுகள் முற்றிலும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கல்வி வளாகங்களில் நடுநிலைத்தன்மையை உறுதி செய்யும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

முன் அனுமதி பெற வேண்டும்

கலாச்சார நிகழ்வுகள், சமூக சேவை திட்டங்கள், இரத்த தான முகாம்கள் மற்றும் நினைவு நிகழ்வுகள் போன்றவை அரசியல் சார்பற்றும் மதச்சார்பற்றும் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவை கல்வி நிறுவனத்தின் நேரடி மேற்பார்வையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய நிகழ்வுகள் நடத்துவதற்கு தகுதியான அதிகாரியின் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மதம், இனம், சாதி, மொழி அல்லது சித்தாந்த அடிப்படையில் மாணவர்களிடையே பிளவு அல்லது வெறுப்பு உருவாக்கும் செயல்பாடுகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் பள்ளி வளாகங்களில் ஒற்றுமை மற்றும் ஒழுங்கை பேணும் முயற்சியாக கவனிக்கப்படுகிறது.

Follow Us