AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுபானங்களுக்கு ரசீது- டாஸ்மாக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் மதுபானப் பாட்டில்களுக்கு ரசீதை முறையாக பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மதுபானங்களுக்கு ரசீது- டாஸ்மாக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Aug 2026 20:51 PM IST

சென்னை, ஆகஸ்ட் 5 : டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் மதுபானப் பாட்டில்களுக்கு ரசீதை முறையாக பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் சென்னையில் உள்ள 30 கடைகளில் விற்பை விலையை விட ரூ.10 கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக சென்னைய சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சென்னையில் உள்ள பெரம்பூர், கொளத்தூர், மாதவரம், காரனோடை மற்றும் வானகரம் உள்ளிட்ட 30 டாஸ்மாக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : கோவை – ஜெயப்பூர் மற்றும் திருநெல்வேலி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் – முன்பதிவு எப்போது?

மேலும், சம்மந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்வதன் மூலம் கடை ஒன்றுக்கு ரூ. 25,000 கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. மாதத்திற்கு ரூ. 7, 5000, மற்றும் வருடத்திற்கு ஒரு கடைக்கு மட்டும் ரூ.90 லட்சம் என கணக்கிட்டால் 30 கடைகளில் இருந்து ரூ. 27 கோடி வசூல் செய்யப்படுகிறது.

இது குறித்து டாஸ்மாக் மேலாளர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு 2025 முதல் 2026 வரை 6 முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் 2022 முதல் 2026 வரை முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 5, 2026 இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, டாஸ்மாக் கடைகளில் எந்த ரசீது புத்தகங்களும் பராமரிக்கப்படுவதில்லை. வாடிக்கையாளர்கள் வாங்கும் மது வகைகளுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்ட மதுக் கடைகளில் எவ்வளவு மது வாங்கியதற்கான எந்த ஆவணங்களையும் அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை ன்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : ரூ.1.3 கோடி லஞ்ச பணம் பறிமுதல்.. தமிழகம் முழுவதும் 24 அரசு ஊழியர்கள் கைது.. டிவிஏசி அதிரடி நடவடிக்கை!

அதனால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபானப் பாட்டில்கள் குறித்து ரசீது புத்தகங்களைப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும், ஒவ்வொரு பாட்டில்களுக்கும் ரசீது வழங்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் மேலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும்இந்த வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 7, 2026 அன்று ஒத்தி வைத்து அவர் உத்தரவிட்டார்.

Follow Us