AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

O.Panneerselvam Tamil Nadu Election: திமுகவில் இணைந்த அதிமுவின் முக்கிய முகம் ஓ.பன்னீர் செல்வம்!

Tamil Nadu Elections 2026 : அதிமுவின் முகமாக இருந்து வந்த ஓ. பன்னீர் செல்வம் அந்தக் கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

O.Panneerselvam Tamil Nadu Election: திமுகவில் இணைந்த அதிமுவின் முக்கிய முகம் ஓ.பன்னீர் செல்வம்!
ஓ. பன்னீர் செல்வம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 05 Mar 2026 13:26 PM IST

தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் 3 முறை முதல்வராக இருந்து வந்தவர் ஓ. பன்னீர்செல்வம். தமிழகத்தின் 2- ஆவது துணை முதல் அமைச்சராகவும் இருந்துள்ளார். 1951- ஆம் ஆண்டு ஜனவரி 14- ஆம் தேதி ஓட்டக்கார தேவர், பழனியம்மாள் நாச்சியார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு அதிமுகவின் மீதான பற்றின் காரணமாக இக்கட்சியில் இணைந்தார். இதை தொடர்ந்து, கடந்த 1996- இல் நடைபெற்ற தமிழக உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், 2017- ஆம் ஆண்டு தமிழக துணை முதல்வராகவும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2001- ஆம் ஆண்டு முதல் 5- ஆவது முறையாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தொடர்ந்து இருந்து வருகிறார். முதல் முறையாக 2001 சட்டமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி ஏற்றார்.

முதல்வர்- அமைச்சர் பதவியில் ஓபிஎஸ்

பின்னர் அதே ஆண்டு வருவாய்துறை அமைச்சராகவும், 2001-2002- ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராகவும் நியமனம் செய்யப்பட்டார். இதே போல, 2002 முதல் 2006- ஆம் ஆண்டு வரை பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்புகளையும் வகித்து வந்தார். இதைத் தொடர்ந்து, 2011 சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். பின்னர் கடந்த 2014 -2015 ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக நியமனம் செய்யப்பட்டார்.

மேலும் படிக்க: அதிமுகவில் ஒட்டுமொத்தமாக இணைந்த 18 கிளை செயலர்கள்… காலியான ஓபிஎஸ் கூடாரம்…!

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்

2015-2016- இல் மீண்டும் நிதி அமைச்சர் பதவியில் நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, 2016 சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு நிதி அமைச்சர், அவை முன்னவர், தமிழக முதல்வர், தமிழகத் துணை முதல்வர் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார். இதை தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவரானார். இவர், கடந்த 2001- ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டபோது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அபூதாஹிர் என்பவரை வீழ்த்தி 54.28% வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்தார்.

5 சட்டமன்ற தேர்தல்களில் தொடர் வெற்றி

அந்த தேர்தல் முதல் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் வரை தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வம் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியிடம் தோல்வியை தழுவினார். தற்போது, அதிமுகவில் ஏற்பட்ட உட்கச்சி பூசல் காரணமாக திமுகவில் இணைந்துள்ளார். இதனால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக சார்பில் களமிறக்கப்படும் ஓ. பன்னீர் செல்வம்

ஆனால், அதே நேரத்தில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் களம் இறக்கப்படும் வேட்பாளரால் தேர்தல் களம் சற்று கடினமாகும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், போடிநாயக்கனூர் தொகுதியில் தொடர்ச்சியாக அதிமுகவின் முகமாக ஓ. பன்னீர்செல்வம் தொடர் வெற்றியை பதிவு செய்து வந்தார். தற்போது, அவர் திமுகவில் இணைந்துள்ள நிலையில், அந்த தொகுதி அதிமுகவின் வசமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. இதனால், தேர்தல் களம் டஃப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க: T. Nagar Constituency Election 2026: 50-50.. அதிமுக VS திமுக.. கடும் போட்டியில் தி. நகர் சட்டமன்ற தொகுதி..

Follow Us