T. Nagar Constituency Election 2026: 50-50.. அதிமுக VS திமுக.. கடும் போட்டியில் தி. நகர் சட்டமன்ற தொகுதி..
தியாகராய நகர் தொகுதியை எடுத்துக் கொண்டால், அதிமுகவின் கை ஓங்கி இருந்துள்ளது. அதாவது, இந்த தொகுதியில் அதிமுக பல முறை வெற்றி பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், திமுக வேட்பாளர் ஜே. கருணாநிதி இதில் வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளரான சத்தியநாராயணன் (டி.நகர் சத்யா) இடம்பெற்றார்.
மார்ச் 4, 2026: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி ஒட்டி இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ச் 10ஆம் தேதிக்குப் பிறகு தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. முதல் 100 தொகுதிகளில் முக்கியத்துவம் பெற்ற தொகுதி தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி (டி.நகர்) ஆகும். இது சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த தொகுதியின் எண் 18 ஆகும். இது தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதியாகும்.
தி.நகர் சட்டமன்ற தொகுதி:
அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், ஆலந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. தியாகராய நகர் தொகுதியை எடுத்துக் கொண்டால், அதிமுகவின் கை ஓங்கி இருந்துள்ளது. அதாவது, இந்த தொகுதியில் அதிமுக பல முறை வெற்றி பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், திமுக வேட்பாளர் ஜே. கருணாநிதி இதில் வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளரான சத்தியநாராயணன் (டி.நகர் சத்யா) இடம்பெற்றார்.
மேலும் படிக்க: உறுதியான திமுக காங்கிரஸ் கூட்டணி.. எத்தனை இடங்கள் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்..
திமுக வேட்பாளர் ஜே. கருணாநிதி 56,035 வாக்குகள் பெற்று டி.நகர் சத்யாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 137 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதிமுக vs திமுக:
கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல் இடத்தில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கருணாநிதி, இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணன், மூன்றாவது இடத்தில் மக்கள் நீதி மையத்தின் பழ. கருப்பையா இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தேமுதிகவிற்கு மீண்டும் முரசு சின்னம்.. நா.த.கவிற்கு விவசாயி சின்னம்… புதுச்சேரியில் பலத்தை நிரூபிக்குமா?
இந்த தொகுதியைப் பொருத்தவரையில், சுமார் 50 சதவீதம் — அதாவது பாதிக்கு பாதி — வாய்ப்புகள் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இருந்து வந்துள்ளன. 1977 ஆம் ஆண்டிலிருந்து திமுக இந்த தொகுதியில் நான்கு முறையும், அதிமுக நான்கு முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதி யாருக்கு சாதகமாக அமையும்? யார் கைப்பற்றுவார்கள்? என்பதில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.