AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செல்வராகவன் நடிப்பில் நாளை வெளியாகிறது மனிதன் தெய்வமாகலாம் படத்தின் டீசர்

Selvaraghavans Manithan Deivamagalam Movie Teaser Out Tomorrow: தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது தொடர்ந்து படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள மனிதன் தெய்வமாகலாம் படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது.

செல்வராகவன் நடிப்பில் நாளை வெளியாகிறது மனிதன் தெய்வமாகலாம் படத்தின் டீசர்
மனிதன் தெய்வமாகலாம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Mar 2026 17:34 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் தான் செல்வராகவன். இவர் முன்னதாக தமிழ் சினிமாவில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இயக்குநராக பல ஹிட் படங்களை இயக்கி வந்த செல்வராகவன் பிறகு படங்களில் நடிகராக நடிக்கவும் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடிகர் செல்வராகவன் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து முக்கிய வேடங்களில் நடித்து வந்த நடிகர் செல்வராகவன் தொடர்ந்து படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதன்படி இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல நடிப்பில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் செல்வராகவன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் மனிதன் தெய்வமாகலாம். அந்தப் படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

நாளை வெளியாகிறது மனிதன் தெய்வமாகலாம் படத்தின் டீசர்:

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கி உள்ள படம் மனிதன் தெய்வமாகலாம் படம். இந்தப் படத்தில் நடிகர் செல்வராகவன் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை குஷி ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் முன்னதாக வெளியிட்டார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல தற்போது டீசர் வெளியீடு குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி மனிதன் தெய்வமாகலாம் படத்தின் டீசர் நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… கே ட்ராமா பிடிக்குமா உங்களுக்கு? தமிழில் காணக் கிடைக்கும் இந்த கேன் திஸ் லவ் பி ட்ரான்ஸ்லேட்டெட்? சீரிசை மிஸ் செய்யாதீர்கள்!

நடிகர் செல்வராகவன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Suraj Venjaramoodu: யூத் படத்தில் நடிக்க ஓகே சொன்னதற்கு காரணம் இதுதான் – சுராஜ் வெஞ்சாரமூடு!

Follow Us