வெளியானது செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Manithan Deivamagalam Movie: இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது நடிகராக வலம் வருகிறார் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது போல செல்வராகவன் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வருகின்றது.

கோலிவுட் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் இயக்குநராக ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் செல்வராகவன். இயக்குநர் செல்வராகவனும் (Director Selvaraghavan) அவரது தம்பி நடிகர் தனுஷ் இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகினர். இவர்கள் இருவரின் கடின உழைப்பாழ் தற்போது தமிழ் சினிமாவில் தங்களுக்கான இடத்தை தக்கவைத்துள்ளனர். அந்த வகையில் இயக்குநராக செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தை தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் என தொடர்ந்து படங்களை இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். இந்த நிலையில் தற்போது 7ஜி ரெயின்போ காலணி படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் செல்வராகவன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சினிமாவில் இயக்குநராக பலப் படங்களை இயக்கிய செல்வராகவன் கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் இருந்து நடிகராகவும் வலம் வரத் தொடங்கினார். அதன்படி சுமார் 3 ஆண்டுகளில் செல்வராகவன் தொடர்ந்து 8 படங்களில் இதுவரை நடித்துள்ளார். இயக்குநராக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற செல்வராகவன் நடிகராகவும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறார்.




இணையத்தில் கவனம்பெறும் மனிதன் தெய்வமாகலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:
இந்த நிலையில் நடிகர் செல்வராகவன் அடுத்ததாக முன்னணி வேடத்தில் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செல்வராகவனின் தம்பியும் நடிகருமான தனுஷ் தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி மனிதன் தெய்வமாகலாம் என்ற அந்தப் படத்தை இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் போஸ்டரில் உடம்பு எல்லாம் ரத்த கரைகளுடன் செல்வராகவன் காவல் நிலையத்திற்கு வெளியே இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் செல்வராகவன் உடன் இணைந்து நடிகர்கள் குஷி ரவி, கௌசல்யா, ஒய்.ஜி.மகேந்திரன், மைம் கோபி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே மிரட்டலாக உள்ள நிலையில் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
When dreams meet despair, and resilience rises from pain… a story rooted in the soil begins ⚡🌾
Unveiling Title & First Look of@selvaraghavan‘s #ManithanDeivamagalam 💥@dennisfilmzone @VyomEntOfficial #VijayaSathish @KusheeRavi #Kausalya #YGeeMahendran @mimegopi #RSSatiz… pic.twitter.com/YkYjwBYl6M
— Dhanush (@dhanushkraja) September 7, 2025