இணையத்தில் வைரலாகும் புருஷன் பட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!
Purushan Movie Shooting Spot Photos: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடித்து வரும் படம் புருஷன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சுந்தர் சி தற்போது அடுத்தடுத்தப் படங்களை தொடர்ந்து இயக்கி வருகிறார். அதன்படி சுந்தர் சி தற்போது நடிகர் விஷால் நாயகனாகவும் நடிகை தமன்னா பாட்டியா நாயகியாகவும் நடித்து வருகிறார். முன்னதாக இவர்கள் இருவருமே இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படங்களில் நடித்து இருந்தனர். அந்தப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புருஷன் படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசர் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் இந்தப் படத்தில் விஷால், தமன்னா மற்றும் யோகி பாபு உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றன. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வரும் நிலையில் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான பென்ஸ் மீடியா மற்றும் அவ்னி சினிமாக்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் ஏ.சி.எஸ் அருண் குமார் மற்றும் குஷ்பு சுந்தர் இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.




இணையத்தில் வைரலாகும் புருஷன் பட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் புருஷன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்தப் புகைப்படத்தில் நடிகர்கள் விஷால், யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் இயக்குநர் சுந்தர் சி உடன் தயாரிப்பாளர் கண்ணன் ரவி ஆகியோரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… 25 நாட்களைக் கடந்த வித் லைவ் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Happened to meet the most versatile actor in indian film industry and one of my favourite on screen performer,our very own jewel, the wonderful Boman Irani. It was a pleasant surprise to hav him on the sets of #Purushan. Heard about his screenwriting workshops that he pic.twitter.com/fPsGKsKXo2
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) March 3, 2026
Also Read… Anirudh: KH X RK புரோமோ பிளான் பண்ணி பண்ணவில்லை.. அனிருத் சொன்ன விஷயம்!