Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக கூட்டணியில் தொடர்கிறதா காங்கிரஸ்?.. செயற்குழுவில் முக்கிய முடிவு.. முழு விவரம்!!

Will Congress continue in the DMK alliance: கூட்டணி குறித்து தங்களது முடிவை கட்சி மேலிடம் ஏற்க வேண்டுமென அவர்கள் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கிறீர்களா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில், டெல்லியில் அண்மையில் நடந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது

திமுக கூட்டணியில் தொடர்கிறதா காங்கிரஸ்?.. செயற்குழுவில் முக்கிய முடிவு.. முழு விவரம்!!
காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 20 Jan 2026 19:26 PM IST

சென்னை, ஜனவரி 20: சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் ஏற்கனவே திமுகவுடன் பேசி வருகிறோம், குழப்பம் எதுவும் ஏற்படுத்தாதீர்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அதேசமயம், அவர்கள் வழக்கம்போல், உறுதியாக திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று கூறாதது பல்வேறு வியூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. தவெகவுடன் கூட்டணி அமைக்கவே, தமிழக நிர்வாகிகள் பலரும் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மேலிடமும் அவர்களின் கருத்து குறித்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

மேலும் படிக்க: லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கு மனைவி அந்தஸ்து – நீதிமன்றம் பரபரப்பு கருத்து

சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டம்:

சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே,, நிவேதித் ஆல்வா, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டணி குறித்து ஆலோசனை:

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஆலோசனை செய்து வருகிறது. கட்சி நிர்வாகிகளிடம் தனியாக பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று  அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, இந்த கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாட்டில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் தமிழக வருகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. திமுக கூட்டணி தொடர்பான கேள்விக்கு, நாங்கள் திமுகவுடன் பேசி வருகிறோம், முதலமைச்சரை சந்தித்துள்ளோம், எந்த குழப்பமும் ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் 30 பேர் பங்கேற்கவில்லை:

இக்கூட்டத்தில், காங்கிரஸ் அறக்கட்டளைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரம் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக இந்தக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 91 பேரில் 60 பேர் மட்டுமே பங்கேற்றதாகவும் 30 பேர் பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனால், கூட்டணி குறித்து தங்களது முடிவை கட்சி மேலிடம் ஏற்க வேண்டுமென அவர்கள் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கிறீர்களா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில், டெல்லியில் அண்மையில் நடந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும் படிக்க: எஸ்ஐஆர் விவகாரம்… உச்சநீதிமன்றம் சென்ற தவெக – என்ன காரணம்?

மாணிக்கம் தாகூர் பங்கேற்கவில்லை:

இதனிடையே, இந்த செயற்குழு கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூரும் பங்கேற்கவில்லை. ஆட்சியில் அதிகாரம் கேட்டு, திமுக கூட்டணியை எதிர்த்து என தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருபவர் மாணிக்கம் தாகூர். தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வலியுறுத்தும் தமிழக தலைவர்களின் முதல் ஆளாக இருப்பவர் என்று கூறும் அளவுக்கு அவரது கருத்துகள் இருந்து வருகின்றன. கூட்டத்தில் கலந்துக்கொள்ளாதது குறித்து விளக்கமளித்த எம்.பி.மாணிக்கம் தாகூர், தாம் பங்கேற்க இயலாது என மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.