Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக சட்டப்பேரவை கூட்டம்…அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது!

Tamil Nadu Assembly: 2026- ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று கூட உள்ளது. இந்தக் கூட்டத்தில் கவர்னர் உரையை ஆளுநர் ஆர். என். ரவி வாசித்து தொடங்கி வைக்க உள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டம் கூடுவது முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்…அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது!
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 20 Jan 2026 06:33 AM IST

தமிழகத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்பது மரபாகும். அதன்படி, 2026- ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 20) நடைபெற உள்ளதாக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பின்னர், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கவர்னர் உரையை வாசித்து கூட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த உரையை ஆளுநர் ஆர். என். ரவி ஆங்கிலத்தில் வாசிப்பார். அதற்கான தமிழாக்கத்தை சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு தமிழில் வாசிப்பார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும். பின்னர், அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடத்தப்பட்டு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் மற்றும் சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு, பின்னர் அறிவிக்கப்படும்.

பரபரப்புக்கு பஞ்சமின்றி நடைபெறும் கூட்டத் தொடர்

அதன்படி, தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெறும். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சட்டப்பேரவை கூட்டம் நடைபெற இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க் கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க உள்ளனர். இதற்கு ஆளும் கட்சி பதில் மூலம் விளக்கம் அளிக்க உள்ளது. இதனால், சட்டப்பேரவை கூட்டம் அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இன்றி விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.

மேலும் படிக்க: லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கு மனைவி அந்தஸ்து – நீதிமன்றம் பரபரப்பு கருத்து

கவர்னர் உரையில் சில வார்த்தைகளை தவிர்த்த ஆளுநர்

இந்த நிலையில், கடந்த 2023- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில், கவர்னர் உரையில் இருந்த பெரியார், சுயமரியாதை, மகளிர் முன்னேற்றம், அம்பேத்கர், மதச்சார்பின்மை, கலைஞர் ஆகிய வார்த்தைகளை ஆளுநர் ஆர். என். ரவி வாசிக்க மறுத்துவிட்டார். அப்போது, ஆளுநர் வாசிக்க மறுத்த வார்த்தைகள் தமிழ்நாடு அரசின் உரையில் இடம் பெறும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியதை அடுத்து, ஆளுநர் பாதியிலேயே கூட்டத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.

கடந்த கால சட்டப்பேரவை நிகழ்வு

இதேபோல, கடந்த 2024 ஆம் ஆண்டு கூட்டத் தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனவும், கடந்த 2025- ஆம் ஆண்டு முதலில் தேசிய கீதம் பாட படவில்லை எனக் கூறி ஆளுநர் ஆர். என். ரவி கூட்டத்திலிருந்து பாதியில் புறப்பட்டுச் சென்றார். இதனால், இன்று நடைபெற இருக்கக்கூடிய சட்டப்பேரவை கூட்டத் தொடரில், ஆளுநர் உரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று சபாநாயகர் மு. அப்பாவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: எஸ்ஐஆர் விவகாரம்… உச்சநீதிமன்றம் சென்ற தவெக – என்ன காரணம்?