Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த 7 மொழி இலக்கியங்களுக்கு செம்மொழி இலக்கிய விருது – முதல்வர் அறிவிப்பு

Literary Award Announcement: சென்னை பன்னாட்டு புத்தக திருவிழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த 7 மொழி இலக்கியங்களுக்கு செம்மொழி இலக்கிய விருது – முதல்வர் அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Jan 2026 22:15 PM IST

சென்னை, ஜனவரி 18 : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது என்ற விருதுகள் மற்றும், தலா ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கில் ஜனவரி 18, 2026 அன்று நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இதனை அறிவித்தார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சென்னை பன்னாட்டு புத்தக திருவிழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வாசிப்பு மூலமாக, தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும் என்று, ஏராளமான முன்னெடுப்புகளை நம்முடைய திராவிட மாடல் அரசு சார்பில் எடுத்து செய்து கொண்டிருக்கிறோம். அதில் முக்கியமானது தான், புத்தகத் திருவிழாக்கள். சென்னையில் மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாகதான், இந்த நான்காவது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.

இதையும் படிக்க : சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகை… – இனி காற்று மாசுபாட்டை ஈஸியா தெரிஞ்சுக்கலாம்

இலக்கிய விருது குறித்து முதல்வர் வெளியிட்ட பதிவு

 

மேலும் பேசிய அர், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, ஐக்கிய அரபு அமீரகம் என, உலகத்தின் பல பகுதிகளில், இது போன்ற பன்னாட்டு புத்தகத் திருவிழாக்கள் நடைபெறும் செய்திகளை நான் பார்ப்பதுண்டு. அப்போதெல்லாம் இப்படிப்பட்ட முன்னெடுப்புகள், தமிழ்நாட்டிலும் நடைபெற வேண்டும் என்று நான் நினைப்பேன். அந்த எண்ணத்தை இப்போது நம்முடைய திராவிட மாடல் அரசில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்றார்.

தமிழ் உள்ளிட்ட 7 மொழி இலக்கியங்களுக்கு செம்மொழி விருது

மனதுக்கு நெருடலாக ஒரு செய்தி தலைநகர் டெல்லியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வந்தது. உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட இருந்த நிலையில், மத்திய அரசின் கலாச்சாரத் துறை தலையீட்டால், விருது அறிவிக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கலை இலக்கிய விருதுகளில் கூட அரசியல் குறுக்கீடுகள் செய்வது ஆபத்தானது. இப்படி ஒரு சூழலில், தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான, உரிய எதிர்வினையை ஆற்றவேண்டும் என்று, பல்வேறு எழுத்தாளர்களும், கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தோரும் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். இது, காலத்தின் தேவை என்று நாங்களும் உணர்ந்தே இருக்கிறோம். அதன்படி, உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற ஒரு அறிவிப்பை இந்த மேடையில் வெளியிட விரும்புகிறேன்.

இதையும் படிக்க : காங்கிரஸ் தலைமை பேச்சை மீறிய மாணிக்கம் தாகூர் எம்.பி.? மீண்டும் டிவிட்டரில் கருத்து பதிவு!

குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியஙகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். இதனை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதில் முதற்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும். விருதுடன், தலா 5 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என அறிவித்தார்.