Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொங்கலுக்கு நடனமாடிய காவலர்கள்.. நடவடிக்கை பாய்ந்ததால் சர்ச்சை.. உத்தரவு உடனே வாபஸ்…

Chennai Police officers dance: குரோம்பேட்டை, பல்லாவரம் காவல் நிலையங்களில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 23 காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது. நடனமாடியதற்காக காவலர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பிய நிலையில், நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டது.

பொங்கலுக்கு நடனமாடிய காவலர்கள்.. நடவடிக்கை பாய்ந்ததால் சர்ச்சை.. உத்தரவு உடனே வாபஸ்…
சினிமான படலுக்கு நடனமாடிய காவலர்கள்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 18 Jan 2026 11:03 AM IST

சென்னை, ஜனவரி 18: பொங்கல் பண்டிகையையொட்டி, காவல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் காவலர்கள் நடனமாடிய வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகளுடனும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், தமிழகத்தில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதையும் படிக்க : தமிழகத்தில் இந்த இருமல் மருத்துக்கு தடை.. குழந்தைகளுக்கு தவறிக்கூட இதை கொடுக்காதீர்கள்!!

காவல் நிலையத்தில் குத்தாட்டம்:

அந்தவகையில், தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களிலும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவ்வாறு, சென்னை குரோம்பேட்டை, பல்லாவரத்தில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த பொங்கல் நிகழ்ச்சியில், சில ஆண், பெண் காவலர்கள் சேர்ந்து சினிமா பாடலுக்கு உற்சாகமாக நடனமாடி கொண்டாடினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. குறிப்பாக, எப்போதும் இறுக்கமான முகத்துடன் காணப்படும் காவலர்கள், காவல் நிலையத்திலேயே ஆட்டம், பாட்டத்துடன் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் பலர் வரவேற்கவும், சிலர் விமர்சனமும் செய்து வந்தனர்.

காவலர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை:

இதனிடையே, காவல் நிலையத்தில் நடமாடிய காவலர்களின் வீடியோ காவல் ஆணையர் அமல்ராஜ் பார்வைக்கு சென்றுள்ளது. இதையடுத்து, பல்லாவரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பழனிவேல், குரோம்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயால் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். அதோடு, 5 துணை காவல் ஆய்வாளர்களும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். அவர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற 20க்கும் மேற்பட்ட மற்ற காவலர்கள் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

மன உளைச்சலுக்கு ஆளான காவலர்கள்:

இந்த சம்பவம் காவலர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நடவடிக்கைக்கு ஆளான காவலர்கள் சிலர் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. பொங்கல் நிகழ்ச்சியின் போது நடனமாடிய காவலர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருக்கலாம், ஆனால் வேடிக்கை பார்த்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது வேதனை அளிப்பதாக போலீசார் கவலை தெரிவித்தனர்.

காவலர்கள் மீதான நடவடிக்கை வாபஸ்:

இந்நிலையில், குரோம்பேட்டை, பல்லாவரம் காவல் நிலையங்களில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 23 காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது. நடனமாடியதற்காக காவலர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியது. இதையடுத்து, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட 23 காவலர்களும் அதே காவல் நிலையத்தில் பணியை தொடரலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மகளிருக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை…ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம்…அதிமுகவின் அசத்தல் தேர்தல் வாக்குறுதி!

அதேசமயம், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 2 காவல் ஆய்வாளர்கள் மீதான நடவடிக்கை வாபஸ் பெறப்படவில்லை. இதையடுத்து, 2 ஆய்வாளர்களை தவிர்த்து மற்ற அனைத்து காவலர்களும் வழக்கம்போல், தாங்கள் பணிபுரிந்த காவல் நிலையங்களுக்கே பணிக்கு திரும்பினர்.