Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை செல்வோர் கவனத்துக்கு…நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்…நாளை முன்பதிவு தொடக்கம்!

Nagercoil To Tambaram Special Train: பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொது மக்களுக்காக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு ஜனவரி 18- ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை ஜனவரி 17- ஆம் தேதி தொடங்க உள்ளது.

சென்னை செல்வோர் கவனத்துக்கு…நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்…நாளை முன்பதிவு தொடக்கம்!
நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 16 Jan 2026 13:04 PM IST

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. இதனால், ஏராளமான பொதுமக்கள் வெளியூர்களிலிருந்து, சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவர்களுக்காக தெற்கு ரயில்வே மற்றும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பொது மக்களின் கூட்டத்தைப் பொறுத்து கூடுதல் ரயில்கள் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தென் மாவட்டமான திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில்கள் அனைத்திலும் முன் பதிவுகள் முடிந்து விட்டன. இதனால், ரயில்களில் டிக்கெட்டுகள் முடிந்து விட்ட நிலையில், பொதுமக்கள் பயணம் செய்வதற்கு இடையூறு ஏற்பட்டது. இதனால், கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என்று பொது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.

நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக தெற்கு ரயில்வே சார்பில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரயிலானது ( வண்டி எண்-06160) வருகிற ஜனவரி 18- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஜனவரி 19- ஆம் தேதி ( திங்கள்கிழமை) அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மேலும் படிக்க: திருவள்ளுவர் தினம்.. தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த 4 முக்கிய வாக்குறுதிகள்!!

நாளை காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை சனிக்கிழமை ( ஜனவரி 17) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதே போல, திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்துக்கு ( வண்டி எண்: 06178) வருகிற ஜனவரி 18- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 15) காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

பொதுமக்கள் மத்தியில் எழுந்த சிறப்பு ரயில் கோரிக்கை

இதனால், ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்புவதற்காக திட்டமிட்டு இருந்த ஏராளமான பொது மக்கள் டிக்கெட் கிடைக்காததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப தற்போது, நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொது மக்களுக்கு பெரும் வசதியாக அமையும்.

மேலும் படிக்க: மேற்குவங்கம்-தமிழகம் அம்ரித் பாரத் ரயில்…புறப்படும் நேரம்…தேதி…அறிவிப்பு!