Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருவள்ளுவர் தினம்.. தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த 4 முக்கிய வாக்குறுதிகள்!!

Thiruvalluvar Day CM MKStalin Promises: வள்ளுவரைப் போற்றும் இந்தத் திருவள்ளுவர் நாளில், தமிழ்நாட்டு மக்களுக்கு தான் 4 முக்கிய வாக்குறுதிகளை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில், அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு என்ற குறளை குறிப்பிட்டுள்ளார்.

திருவள்ளுவர் தினம்.. தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த 4 முக்கிய வாக்குறுதிகள்!!
முதல்வர் ஸ்டாலின்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Jan 2026 11:50 AM IST

சென்னை, ஜனவரி 16: வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் திருவள்ளுவர் நாளில், தமிழ்நாட்டு மக்களுக்கு தான் 4 முக்கிய வாக்குறுதிகளை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நாடு கடந்து வாழும் தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1333 திருக்குறள்கள் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர் திருவள்ளுவர். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் தங்களுடைய உரைகளின்போது இன்றளவும் திருக்குறளை மேற்கொள் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க : சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு… விஜய்யின் வாழ்த்து தேர்தலுக்காக இருக்கலாம் – தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்

முதல்வர் ஸ்டாலினின் 4 முக்கிய வாக்குறுதிகள்:

இந்நிலையில், வள்ளுவரைப் போற்றும் இந்தத் திருவள்ளுவர் நாளில், தமிழ்நாட்டு மக்களுக்கு தான் 4 முக்கிய வாக்குறுதிகளை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில், அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு என்ற குறளை குறிப்பிட்டுள்ளார். அதோடு, வள்ளுவன் சொன்ன அஞ்சாமை, மனிதநேயம், அறிவாற்றல், ஊக்கமளித்தல் ஆகியவை திமுக ஆட்சியின் அடிநாதம் என்று கூறியுள்ளார்.

1. சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சலும்.
2. வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்களும் தொடரும்.
3. இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்.
4. தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகளும் தமிழ்நாட்டில் தொடரும் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை:

தொடர்ந்து, திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு, தமிழக அரசு வாயிலாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கான விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

விருது வழங்கிய முதல்வர்:

அந்தவகையில், முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கி கெளரவித்தார். தொடர்ந்து, திருவள்ளுவர் விருது- முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், பெரியார் விருது – வழக்கறிஞர் அருள்மொழி, அம்பேத்கர் விருது – விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், காமராஜர் விருது – எஸ்.எம்.இதயத்துல்லா, மகாகவி பாரதியார் விருது – கவிஞர் நெல்லை ஜெயந்தா, பாரதிதாசன் விருது- கவிஞர் யுகபாரதி, தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது – முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, முத்தமிழறிஞர் கலைஞர் விருது – விடுதலை விரும்பி ஆகியோருக்கு விருது வழங்கி சிறப்பித்தார்.

இதையும் படிங்க : தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் சொன்ன தகவல்!

குறிப்பாக, விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெற்றனர்.