“திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்”.. திருவள்ளுவர் தினத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள்!!
PM Modi asks everyone to read Thirukkural: தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் தனது எக்ஸ் பதிவில், அனைவரும் திருக்குறள் படிக்க வலியுறுத்தி கருத்து பதிவிட்டுள்ளார். அதோடு, தான் கன்னியாகுமரி வந்த போது, திருவள்ளுவர் சிலை அருகே எடுக்கப்பட்ட வீடியோ, தான் பேசிய திருக்குரல் உள்ளிட்டவற்றையும் வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க : தைப்பொங்கல் பண்டிகை.. தமிழர் வாழ்வு செழித்திட முதல்வர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் வாழ்த்து!!




பிரதமர் மோடி எக்ஸ் பதிவு:
திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு… pic.twitter.com/WkIY56Mvq5
— Narendra Modi (@narendramodi) January 16, 2026
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தை 2ம் தேதி திருவள்ளுவர் தினம்:
நாடு கடந்து வாழும் தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
1333 திருக்குறள்கள் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர் திருவள்ளுவர். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் தங்களுடைய உரைகளின்போது இன்றளவும் திருக்குறளை மேற்கொள் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
திருவள்ளுவர் பிறந்ததற்கான சான்றில்லை:
மறைமலை அடிகள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் 1921ஆம் ஆண்டு சென்னை-பச்சையப்பன் கல்லூரியில் கூடி தமிழர்களுக்கென ஒரு தனி ஆண்டு’ தேவை என்று கருதி, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும், அதையே “தமிழ் ஆண்டு’ எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு 31 என்றும் முடிவெடுத்தார். அதனைக் கணக்கிட்டு திருவள்ளுவர் ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. எனினும் திருவள்ளுவர் பிறந்த வருடத்திற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. அவரை சமணர் என்றும் சைவர் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.
இதையும் படிக்க : தைப்பொங்கல் பண்டிகை.. தமிழர் வாழ்வு செழித்திட முதல்வர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் வாழ்த்து!!
திருவள்ளுவர் பிறந்த மாதம் வைகாசி எனக் கூறப்பட்டு விழா எடுக்கப்பட்டு வந்த நிலையில், 1971ஆம் ஆண்டு முதல் தை 2ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.