Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு…தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

Thiruparankundram Verdict Key Features: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அளித்துள்ள பரபரப்பு தீர்ப்பில் முக்கிய அம்சங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம். இதில், தமிழக அரசு மீது நீதிமன்றம் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு…தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!
திருப்பரங்குன்றம் வழக்கின் முக்கிய அம்சங்கள்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 06 Jan 2026 12:29 PM IST

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை திருநாளையொட்டி, தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதில், அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்/ப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 6) தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற பரபரப்பு தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கியது. இந்த வழக்கானது நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் விசாரணை நடைபெற்றது. இந்த தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்… மதுரை அமர்வு பரபரப்பு தீர்ப்பு!

  • திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு செயல் பட்டுள்ளது.
  • திருப்பரங்குன்றத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் நிலை உருவாகினால் அதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.
  • அரசியல் காரணங்களை நிறைவேற்றுவதற்காக எந்த அரசும் எவ்வளவு தரம் தாழ்ந்து செயல்படக்கூடாது.
  • திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவது என்பது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
  • திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கோவில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்றப்பட வேண்டும். இதனை, மதுரை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.
  • திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானதாகும்.
  • மதுரை உயர்நீதிமன்ற அமர்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில், இஸ்லாமிய மற்றும் இந்து பண்டிகைகளின் போது, இரு மதத்தினரும் ஒருவருக்கொருவர் இடையூறு செய்து கொள்ளாமல் பண்டிகையை கொண்டாட வேண்டும்.
  • திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வின் போது, அந்த பகுதிக்கு மக்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது.
  • எனவே, தனி நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் செல்லும்.

மேற்கண்ட முக்கிய உத்தரவுகளை இரு அமர்வு நீதிபதி பிறப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் முடித்து வைக்கப்பட்டுள்ளன. தீபத்தூண் விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள், கடையடைப்பு உள்ளிட்டவை நடைபெற்றது. முருக பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:உங்கள் வீட்டில் செல்வம் செழிக்க.. தை முதல் நாள் வாங்க வேண்டிய மங்களப் பொருட்களும்.. ஆன்மிக விளக்கமும்!!