ஜல்லிக்கட்டு பிரியர்களே தயாரா…மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகள் அறிவிப்பு!
Madurai District Jallikattu Competitions Dates: மதுரை மாவட்டத்தில் ஜல்லிக் கட்டு போட்டிகள் நடத்துவதற்கான தேதிகளை மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன் குமார் அறிவித்துள்ளார். மேலும், ஜல்லிக் கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கமாகும். இந்த போட்டிகளானது ஒவ்வொரு ஆண்டும் தவறாது நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது உலக புகழ் பெற்றதாகும். இந்த மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடத்தப்படும். இந்த போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடிப்பதற்காக முறையான பயிற்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வாடிவாசல் களத்தில் இறங்குகின்றனர். இதே போல, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதன் பின்னரே ஜல்லிக்கட்டில் களம் இறக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக ஆட்சியர் ஆலோசனை
இந்த நிலையில், மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் படிக்க: பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…ஈஸியா ஊருக்கு போகலாம்!




ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதிகள் அறிவிப்பு
அதன் பின்னர், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான தேதிகளை மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன் குமார் அறிவித்தார். அதன்படி, அவனியாபுரத்தில் வரும் ஜனவரி 15-ஆம் தேதி (வியாழக்கிழமை), பாலமேட்டில் ஜனவரி 16- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), அலங்காநல்லூரில் ஜனவரி 17- ஆம் தேதி (சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முறையான வழிகாட்டுதல்கள்
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு முறையான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முறையான அனுமதி ஆகியவற்றை பெற்று தான் போட்டிகளை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டுக்கான பணிகள் தீவிரம்
இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளை ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவினர் மேற்கொள்ள உள்ளனர். வாடிவாசல், காளைகள் அவிழ்த்து விடப்படும் பகுதி, களத்தில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை பிடித்து செல்வதற்கான இடம், பொதுமக்கள் அமர்ந்து பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள். சாரம் அமைக்கும் பணி உள்ளிட்டவை தொடங்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: 2026-இன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி…காளைகளுடன் மல்லுகட்டிய காளையர்கள்!