பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…ஈஸியா ஊருக்கு போகலாம்!
Special Trains Announces For Pongal Festival: பொங்கல் பண்டிகையையொட்டி, தென்காசி, கோவை, பொத்தனூர் ஆகிய ஊர்களுக்கு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் எந்தெந்த தேதியில் இயக்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் இந்தப் பதிவில் பார்க்கலாம் .
தமிழகத்தில் வருகிற ஜனவரி 15- ஆம் தேதி ( வியாழக்கிழமை ) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்வார்கள். இவர்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும், தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி, வருகிற பொங்கல் பண்டிகையொட்டி, தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தென்னக ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வருகிறார் ஜனவரி 12- ஆம் தேதி ( திங்கள்கிழமை) செங்கல்பட்டில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் ஜனவரி 13- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) தென்காசியை சென்றடையும்.
எழும்பூர் டூ தென்காசி
இதே போல, மறு மார்க்கமாக தென்காசியில் இருந்து ஜனவரி 19-ஆம் தேதி ( திங்கள் கிழமை) புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் ஜனவரி 20- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) செங்கல்பட்டுக்கு வந்து சேரும். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 9- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் ஜனவரி 10- ஆம் தேதி (சனிக்கிழமை) தென்காசியை சென்றடையும். ஜனவரி 14- ஆம் தேதி ( புதன்கிழமை) தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு முறையில் மறுநாள் ஜனவரி 15- ஆம் தேதி (வியாழக்கிழமை) ராமேஸ்வரத்தை சென்றடையும்.
மேலும் படிக்க: பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம் எப்போது..கூட்டுறவுத் துறை முக்கிய அறிவிப்பு!




ராமேஸ்வரம் டூ தாம்பரம்
மறு மார்க்கமாக ராமேஸ்வரத்தில் இருந்து ஜனவரி 21- ஆம் தேதி ( புதன்கிழமை) புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் ஜனவரி 22 ஆம் தேதி ( வியாழக்கிழமை) தாம்பரத்தை வந்தடையும். பொத்தனூரில் இருந்து ஜனவரி 13- ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் ஜனவரி 14-ஆம் தேதி செங்கோட்டையை வந்தடையும். ஜனவரி 13- ஆம் தேதி சென்னையில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் ஜனவரி 14ஆம் தேதி மங்களூர் சென்றடையும்.
எழும்பூர் டூ கோவை சிறப்பு ரயில்
சென்னையிலிருந்து ஜனவரி 12- ஆம் தேதி புறப்படும் சிறப்பு முறையில் மறுநாள் ஜனவரி 13- ஆம் தேதி கோவை வந்தடையும். பின்னர், மறு மார்க்கமாக கோவையில் இருந்து ஜனவரி 19- ஆம் தேதி ( திங்கள்கிழமை) புறப்படும் ரயில் மறுநாள் ஜனவரி 20- ஆம் தேதி சென்னை எழும்பூரை வந்தடையும்.
சென்னை டூ பொத்தனூர்
சென்னையிலிருந்து ஜனவரி 14- ஆம் தேதி சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் ஜனவரி 15- ஆம் தேதி பொத்தனூர் சென்றடையும். மறு மார்க்கமாக பொத்தனூரில் இருந்து ஜனவரி 21- ஆம் தேதி ( புதன்கிழமை) புறப்படும் ரயில் மறுநாள் எழும்புரை வந்தடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பொங்கல் போனஸ்.. ஓய்வூதியம் பெறுவோர் யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?.. யாருக்கு கிடையாது?