அரசு மருத்துவமனையில் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்…மருத்துவர்களுக்கு ஷாக் கொடுத்த சுகாதாரத்துறை!
Sivaganga 4 Doctors Suspended: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாடத்தில் ஈடுபட்ட 4 மருத்துவர்கள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கள்ளல் அருகே உள்ள செம்பனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வட்டார மருத்துவ அலுவலர், 4 மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோர் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த மருத்துவமனை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், கடந்த புத்தாண்டு தினத்தன்று விபத்தில் சிக்கிய ஒரு நபர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில், அங்குள்ள ஒரு அறையில் வெளிநாட்டு மதுபானங்கள், அசைவ உணவு உள்ளிட்டவற்றுடன் மருத்துவர்கள் மது போதையில் கிடந்ததை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறை தலைமை மருத்துவர் மீனாட்சியின் கவனத்திற்கு சென்றது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு அவர் உத்தரவிட்டார். அதன் பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மது விருந்து- மருத்துவர்கள் உள்பட 5 சஸ்பெண்ட்
இதில், கடந்த டிசம்பர் 31- ஆம் தேதி செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள் உள்ளிட்டோர் மதுபோதையில் புத்தாண்டு கொண்டாடியது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவர்களான கௌஷிக், மணிரத்தினம், சசிகாந்த், நவீன் குமார் மற்றும் மருந்தாளுனர் கமலக்கண்ணன் ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: இதுவரை இல்லாத அளவு.. 2025 ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோவில் 11.19 கோடி பேர் பயணம்..




ஊழியர்களுக்கு விளக்க நோட்டீஸ்
இதே போல, ஆரம்ப சுகாதார நிலையத்தில் 31- ஆம் தேதி இரவு பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவுகளை சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி தெரிவித்தார். பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய முக்கிய பொறுப்பில் இருக்கும் மருத்துவர்கள், தனது பொறுப்பை தட்டிக் கழித்து மருத்துவமனையில் மதுபோதையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள்…
செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அந்த பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இங்கு, தினந்தோறும், சுமார் 50- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், ஏழை எளிய மக்கள் அறுவை சிகிச்சை, பிரசவம் உள்ளிட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவர்களின் கீழ்த்தரமான செயல்
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, அறுவை சிகிச்சை பிரிவு என இரண்டு கட்டடங்களில் செயல்பட்டு வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களின் கீழ்த்தரமான செயல்கள் நோயாளிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: “வேலியே பயிரை மேய்ந்தால்”.. சென்னையில் நூதன வழிப்பறியில் ஈடுபட்ட 3 போலீசார்.. திடுக் சம்பவம்!! T