Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல்”.. ஆளுநரிடம் இபிஎஸ் பரபரப்பு புகார்!!

Edappadi Palaniswami met Governor RN Ravi: அமித்ஷா உடனான சந்திப்பு நேற்றைய தினம் முடிந்த நிலையில், இன்று சென்னையில் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களின் பட்டியலை ஆளுநரிடம் அளித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.

“திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல்”.. ஆளுநரிடம் இபிஎஸ் பரபரப்பு புகார்!!
எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Jan 2026 13:16 PM IST

சென்னை, ஜனவரி 06: தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து மனு அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரும் இருந்தனர். முன்னதாக, இரண்டு நாள் சுற்றுப் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்திருந்தார். அப்போது, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரை இரண்டு முறை சந்தித்து பேசி இருந்தார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ரேசன் கடை விடுமுறையில் மாற்றம்..பொங்கல் பரிசுக்காக புது உத்தரவு.. முழு விவரம் இதோ!

நேற்று அமித்ஷாவுடன், இன்று ஆளுநருடன் சந்திப்பு:

இந்நிலையில், இந்த சந்திப்பு நேற்றைய தினம் முடிந்த நிலையில், இன்று அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளுநரை சந்தித்தனர். திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களின் பட்டியலை ஆளுநரிடம் அளித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். எனினும், திமுக மீதான புகார் தாண்டி பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்:

இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது.

திமுக அரசின் ஊழல்கள் தொடர்பாக ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்; இந்த விசாரணை கமிஷனை உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். இந்த ஊழல் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய புத்தகத்தை ஆளுநர் ரவியிடம் கொடுத்திருக்கிறோம் என்றார்.

மேலும் படிக்க: மதுப் பிரியர்களுக்கு முக்கியச் செய்தி… காலி மதுபாட்டிலை திரும்ப அளித்தால் பணம்!

பொங்கல் ரொக்கத்தொகை ரூ.5000 வழங்க வேண்டும்:

மேலும், தேர்தலை மனதில் வைத்துதான் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.